சட்டங்கள்

 

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள் : தொழுகை நேரம் வந்து விட்டால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லவேண்டும். மேலும் உங்களில் (சன்மார்க்க அடிப்படையில்) பெரியவர் இமாமத் செய்ய வேண்டும். அறிவிப்பவர் : மாலிக்பின் ஹுவைரிஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ , ஆதாரம் : புகாரீ, முஸ்லிம். தனித்துத் தொழும் போதும் பாங்கு மற்றும் இகாமத் சொல்லி தொழவேண்டும்: – ஒரு மலையின் மேற்பகுதியில ஆடுமேய்த்துக் கொண்டிருக்கும் ஒருவர், தானே பாங்கு சொல்லித் தொழும் போது, உங்கள் இறைவன் மிக சந்தோஷம் அடைகிறான். (மேலும் மலக்குகளை நோக்கி) ”இதோ எனது இவ்வடியான் என்னை பயந்தவனாக பாங்கு சொல்லி தொழுவதைப் பாருங்கள்! அவன் பாவங்களை நான் மன்னிப்பதோடு, அவனை நான் சுவர்க்கத்திலும் நுழைய வைப்பேன்” என்று அல்லாஹ் கூறுவான் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூற, நான் கேட்டிருக்கின்றேன். அறிவிப்பவர் :உக்பா பின் ஆமிர் رَضِيَ اللَّهُ عَنْهُ ஆதாரம் : அபூதாவுத், நஸயீ

Leave a comment

Your email address will not be published.


*