முஸ்லீம்கள் இந்துக்களாக பிறந்தவர்கள் என நான் எப்போது சொன்னேன்?: சு.சாமி

முஸ்லீம்கள் இந்துக்களாக பிறந்தவர்கள் என நான் எப்போது சொன்னேன்?: சு.சாமி
டெல்லி: அனைத்து முஸ்லீம்களும் இந்துக்களாக பிறந்தவர்கள் என தான் கூறவில்லை என்று பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி மசூதிகள் இடித்து தள்ளக்கூடிய வெறும் கட்டிடங்களே என்று தெரிவித்தார். மேலும் அனைத்து முஸ்லீம்களும் இந்துக்களாக பிறந்தவர்கள் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் இது குறித்து சாமி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
அனைத்து முஸ்லீம்களும் இந்துக்கள் என்று நான் கூறியதாக பொய்யை பரப்புகிறார்கள். ராவணன் தலித் என்பது போன்று என தெரிவித்துள்ளார்.
முன்னதாக சாமி கடந்த ஆண்டு உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் ராவணன் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத்தில் பிறந்த தலித் என்று தெரிவித்தார். மேலும் இந்திய மண்ணில் பிறந்த அனைத்து முஸ்லீம்களும் இந்துக்கள் தான். அதை அவர்களின் மரபணுவை சோதனை செய்து நிரூபிக்க முடியும் என்றார். பின்னர் தான் அவ்வாறு கூறவே இல்லை என்று மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more at: http://tamil.oneindia.com/news/india/never-said-muslims-were-born-hindus-says-swamy-222714.html

Thanks: OneIndia-Tamil

Leave a comment

Your email address will not be published.


*