அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு நாடு முழுவதும் ‘ராம் மகோத்சவம்’: விஷ்வ இந்து பரிஷத் அறிவிப்பு

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு நாடு முழுவதும் ‘ராம் மகோத்சவம்’: விஷ்வ இந்து பரிஷத் அறிவிப்பு

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு இந்துக்களை ஒன்று திரட்டவும், அவர்களுக்கு நினை வூட்டவும் நாடு முழுவதும் ராம் மகோத்சவம் நடத்தப்படும் என்று விஷ்வ இந்து பரிஷத் அறி வித்துள்ளது.

இதுகுறித்து விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் ஊடகப் பொறுப் பாளர் ஷரத் சர்மா நேற்று செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

ராம் மகோத்சவம் மார்ச் 21 அல்லது 22-ம் தேதி தொடங்கப் படும். இந்நிகழ்ச்சி ஏப்ரல் 1-ம் தேதி வரை நீடிக்கும். இந்நிகழ்ச் சியை நாடு முழுவதும் உள்ள கிராமங்கள்தோறும் முதல் முறையாக நடத்த திட்டமிட்டுள் ளோம். இந்த நிகழ்ச்சி, ராம ஜென்ம பூமி இயக்கத்துக்கு பலத்தைக் கூட்டும். இந்த மகோத்சவத்தின் போது, இரண்டு அல்லது இரண் டரை அடி உயரமுள்ள ராமர் சிலை நிறுவப்பட்டு வழிபாடு நடத்தப் படும். பத்து நாட்கள் நடக்கும் நிகழ்ச்சிக்குப் பிறகு, அந்தந்த இடத் திலேயே ராமர் சிலை நிறுவப்படும். அல்லது ஆற்றில் கரைக்கப்படும்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு இந்துக்கள் உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அதை நினைவூட்டவும், லட்சி யத்தை நிறைவேற்ற உறுதிமொழி எடுக்கவும் இந்நிகழ்ச்சி நடத்தப் படுகிறது. ராம் மகோத்சவம் நிகழ்ச்சியை நாடு முழுவதும் 2 லட்சம் கிராமங்களில் நடத்த திட்ட மிட்டுள்ளோம். உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட்டில் ஒவ்வொரு கிராமத்திலும் இந்நிகழ்ச் சியை நடத்த முயற்சி எடுப்போம்.

மேலும் 600 இந்து மாநாடு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது மார்ச் மாதம் வரை நடத்தப்படும். இந்நிகழ்ச்சியில் பரிஷத் தலைவர்கள் அசோக் சிங்கால், பிரவீண் தொகாடியா, பாஜக எம்.பி. யோகி ஆதித்யநாத் உட்பட பலர் பங்கேற்கின்றனர். விநாயகர் சதுர்த்தி, துர்கா பூஜை களை விமரிசையாகக் கொண்டாடு வதுபோலவே, ராம நவமியையும் கொண்டாட வேண்டும் என்பதுதான் இந்நிகழ்ச்சிகளின் நோக்கம். இவ்வாறு ஷரத் சர்மா கூறினார்.

Leave a comment

Your email address will not be published.


*