ஆர்எஸ்எஸ்ஸை பயங்கரவாத இயக்கமாக அறிவிக்க வேண்டும்! – அமெரிக்க சீக்கிய அமைப்பு

ஆர்எஸ்எஸ்ஸை பயங்கரவாத இயக்கமாக அறிவிக்க வேண்டும்! – அமெரிக்க சீக்கிய அமைப்பு

நியூயார்க்: இந்தியாவில் செயல்படும், ஆர்எஸ்எஸ் அமைப்பை பயங்கரவாத இயக்கமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி சீக்கியர்களுக்கான நீதி (எஸ்எப்ஜே) என்ற அமைப்பு அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

அந்த மனுவில், இந்தியாவில் செயல்படும் ஆர்எஸ்எஸ் அமைப்பை, வெளிநாட்டு தீவிரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

பாபரி மஸ்ஜித் இடிப்பு, சீக்கியர்களின் பொற்கோயிலுக்குள் இராணுவ நடவடிக்கை எடுக்கத் தூண்டியது, 2008ல் சர்ச்சுகளை எரித்து, கன்னியாஸ்திரிகளை மானபங்கம் செய்தது, 2002ல் குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த இனக் கலவரம் போன்றவற்றில் ஆர்எஸ்எஸ்ஸுக்கு முழுமையான தொடர்புள்ளதாக அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், தாய் மதத்திற்கு திரும்புமாறு முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களை கட்டாய மதமாற்றமும் செய்து வருகிறது ஆர்எஸ்எஸ் என்றும் அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே, ஆர்எஸ்எஸ் அமைப்பை, வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவிக்க வேண்டும் என்று அந்த மனு கோரிக்கை விடுத்துள்ளது.

இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி, இந்த விஷயத்தில் இன்னும் 60 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று சம்மன் அனுப்பியுள்ளது.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியா வரும் சமயத்தில் இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

thanks to : http://www.thoothuonline.com

Leave a comment

Your email address will not be published.


*