ஒரு நாள் போட்டியில் அதிவேக சதமடித்து ஏ.பி. டிவில்லியர்ஸ் சாதனை

ஒரு நாள் போட்டியில் அதிவேக சதமடித்து ஏ.பி. டிவில்லியர்ஸ் சாதனை

தென்னாப்பிரிக்காவின் ஜோகன் னஸ்பர்க்கில் நேற்று நடை பெற்ற மேற்கிந்தியத் தீவு களுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில், 31 பந்துகளில் சதமடித்து, தென்னாப் பிரிக்காவின் ஏ.பி. டிவில்லியர்ஸ் வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளார்.

முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்காவுக்கு ஹசிம் ஆம்லா, ரஸ்ஸவ் அதிரடி தொடக்கம் தந்தனர். 102 பந்துகளில் ரஸ்ஸவ் சதமடித்தார். அதைத் தொடர்ந்து ஆம்லா 103 பந்துகளில் சதமடித்தார். ரஸ்ஸவ் 128 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் குவித்தது. இதன் மூலம் அதிக ரன் குவித்த தென்னாப்பிரிக்க தொடக்க ஜோடி என்ற சாதனையை இந்த ஜோடியின் வசமானது.

தொடர்ந்து களமிறங்கிய அந்த அணியின் கேப்டன் ஏ.பி. டிவில்லியர்ஸ் 16 பந்துகளில் 3 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் அரைசதம் அடித்து புதிய சாதனை நிகழ்த்தினார்.

தொடர்ந்து வாணவேடிக்கை காட்டிய அவர், 31 பந்துகளில் 8 பவுண்டரி, 10 சிக்ஸர்களுடன் சதமடித்தார். இதன் மூலம் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதி வேக சதமடித்தவர் என்ற சாதனையைப் படைத்தார். முன்னதாக, நியூஸிலாந்தின் கோரி ஆண்டர்சன் 36 பந்துகளில் சதமடித்ததே சாதனையாக இருந்தது. 59 பந்துகளைச் சந்தித்த டிவில்லியர்ஸ் 149 ரன்களைக் குவித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். இப்போட்டியில் 16 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் ஒரு போட்டியில் அதிக சிக்ஸர் விளாசியவர் என்ற சாதனையை ரோஹித் சர்மாவுடன் பகிர்ந்து கொண்டார்.

ஒரு நாள் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் மூன்று சதம் என்ற சாதனையையும், தென்னாப்ரிக்கா வசமானது. ஆம்லா இறுதி வரை ஆட்டமிழக்காமல் 153 ரன்கள் குவித்தார். 50 ஓவர் முடிவில் தென்னாப்பிரிக்கா 2 விக்கெட் இழப்புக்கு 439 ரன்கள் குவித்தது. ஜோகன்னஸ்பர்க்கில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்னாகவும், தென்னாப்பிரிக் காவின் அதிகபட்ச ரன்னாகவும் இது அமைந்தது. கடின இலக்கை விரட்டிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 40 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 242 ரன் எடுத்திருந்தது.

Leave a comment

Your email address will not be published.


*