தாய்மதமான இஸ்லாத்தை ஏற்று கொள்ளுமாறு ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு உவைஸி அழைப்பு!

தாய்மதமான இஸ்லாத்தை ஏற்று கொள்ளுமாறு ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு உவைஸி அழைப்பு!

ஐதராபாத் : ஆர்.எஸ்.எஸ் மற்றும் வி.எச்.பியினர் தாய் மதம் திரும்புதல் குறித்து வெளியிடும் சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு பதிலடியாக உலகில் பிறந்த அனைத்து மனிதர்களும் முஸ்லீம்களே என்று மஜ்லிஸ் இ இத்திஹாதுல் முஸ்லீமின் அமைப்பின் தலைவர் அசததுதீன் உவைஸி பதிலடி கொடுத்துள்ளார்.

குஜராத்தில் நடந்த தீவிரவாத எதிர்ப்பு ஒத்திகையின் போது முஸ்லீம்கள் அணியும் தொப்பி போன்றவை அணிவிக்கப்பட்டு இஸ்லாமிய கோஷங்கள் எழுப்பப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த அஸதுதீன் உவைஸி குஜராத் காவல்துறை முஸ்லீம்கள் தங்கள் மதத்தை பின்பற்றுவதற்கு அச்சப்பட வேண்டும் என்று நினைப்பதாக குற்றம் சாட்டினார். உண்மை என்னவெனில் இவ்வுலகில் தீவிரவாதத்தை ஒழிக்கவே இஸ்லாமும் முஹம்மது நபியும் வந்ததாக உவைஸி கூறினார்.

உண்மையான தாய்மதம் திரும்பல் என்பது இஸ்லாத்திற்கு மாறுவதே என்று கூறிய உவைஸி ஆர்.எஸ்.எஸ் மற்றும் வி.எச்.பியை இஸ்லாத்தை ஏற்று கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். மேலும் இஸ்லாத்தை ஏற்று கொண்டால் தம்மால் பொருளாதார உதவி அளிக்க முடியாது என்றும் அதற்கு பதிலாக இவ்வுலகிலும் இறப்பிற்கு பின் உள்ள வாழ்க்கையிலும் வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்க முடியும் என்றும் உவைஸி கூறினார்.

இவ்வுலகில் பிறக்கும் அனைவரும் முஸ்லீம்களே என்றும் அவர்களது பெற்றோரும் சூழல்களுமே அவர்களை பிற மதத்தவர்களாக மாற்றுகிறது என்றும் உவைஸி கூறினார். இந்து மதம் திரும்பும் முஸ்லீம்களுக்கு 5 இலட்சம் தருவதாக சொல்வது குறித்து பேசிய உவைஸி வெறும் 5 இலட்சம் என்பது நகைச்சுவையானது என்று கூறினார். மேலும் உலகமே எங்கள் காலடியில் கொட்டி கொடுத்தாலும் நாங்கள் இஸ்லாத்தை விட்டு விலக மாட்டோம் என்றும் உவைஸி கூறினார்.

thanks to : http://www.thoothuonline.com

Leave a comment

Your email address will not be published.


*