இந்திய கடற்படையில் பயிற்சியுடன் கூடிய அதிகாரி பணி

இந்திய கடற்படையில் பயிற்சியுடன் கூடிய அதிகாரி பணி

இந்திய கடற்படையில் பிளஸ்-2 படித்தவர்கள் பயிற்சியுடன் கூடிய அதிகாரி பணிக்கு சேர்க்கப்படுகிறார்கள்.

இந்திய ராணுவத்தின் முப்படைகளில் ஒன்று கடற்படை. இளைஞர்கள் கடற்படையில் சேர்வதை பெருமையாக கருதுகிறார்கள். நாட்டிற்கு சேவை செய்யும் வகையில் இருப்பதாலும், மக்கள் மத்தியில் மதிப்பு மிகு பணியாக இருப்பதாலும் அவர்கள் ராணுவ பணியை விரும்புகிறார்கள்.

கடற்படையும், இளைஞர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் பல்வேறு பயிற்சிகளின் அடிப்படையில் தகுதியானவர்களை பணியில் சேர்த்து வருகிறது. தற்போது ‘கேடட் பி.டெக் என்ட்ரி’ என்ற பயிற்சியில் பிளஸ்-2 படித்தவர்களை சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. இவர்கள் குறிப்பிட்ட கால பயிற்சிக்குப் பின் அதிகாரியாக பணி நியமனம் பெறலாம்.

இந்திய குடியுரிமை பெற்ற, திருமணமாகாத ஆண்கள் இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். இதில் சேர்வதற்கான இதர தகுதிகள் இனி…

:

விண்ணப்பதாரர்கள் 17 முதல் 19Ñ வயதுக்கு உட்பட்டவர் களாக இருக்க வேண்டும். அதாவது 2-1-1996 மற்றும் 1-7-1998 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். இந்த இரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்களே.

10+2 முறையில் மேல்நிலைக் கல்வி அல்லது அதற்கு நிகரான படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் கணிதம் மற்றும் இயற்பியல், வேதியியல் பாடங்களில் 70 சதவீத மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்ணும் பெற்று தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.

உடல் தகுதி:

விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரமும், அதற்கேற்ற எடையும் இருக்க வேண்டும். மார்பளவு 5 செ.மீ. விரியும் திறனுடன் இருக்க வேண்டும். பார்வைத்திறன் 6/6 மற்றும் 6/9 என்ற அளவுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

மேல்நிலைக் கல்வியில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு முறைக்கு அழைக்கப்படுவார்கள். அவர்களுக்கு ஸ்டேஜ்1, ஸ்டேஜ்2 ஆகிய இரு நிலைகளில் நுண்ணறிவுத் திறன், படங்களை புரிந்து கொள்ளுதல், குழு கலந்துரையாடல், உளவியல் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகிய தேர்வுகள் நடைபெறும்.

இதில் ஒவ்வொரு தேர்விலும் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் உருவாக்கப்பட்டு முன்னிலை பெறுபவர்கள் பயிற்சியில் சேர்க்கப்படுவார்கள். வருகிற ஜூன் முதல் 4 ஆண்டுகளுக்கு இவர்களுக்கு பி.டெக் கல்வி மற்றும் பயிற்சி அளிக்கப்படும். அதில் தேர்ச்சி பெறுபவர்கள் உதவி லெப்டினன்ட் அதிகாரியாக பணி நியமனம் பெறலாம். இவர்கள் அட்மிரல் பணி வரை பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு பெறமுடியும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். பின்னர் பூர்த்தியான விண்ணப்பத்தை 2 கணினிப் பிரதி எடுத்துக் கொள்ளவும். அதில் ஒன்றுடன், தேவையான சான்றிதழ் நகல்கள், சுயமுகவரியிட்ட அஞ்சல் உறை ஆகியவற்றை இணைத்து சாதாரண தபாலில் குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அஞ்சல் முகப்பில் விண்ணப்ப எண், கல்வித்தகுதி, மதிப்பெண் சதவீதம், என்.சி.சி. தகுதி ஆகியவற்றை குறிப்பிடுவது அவசியம்.

முக்கிய தேதிகள்:

இணையதள விண்ணப்ப பதிவு ஆரம்பித்த நாள் : 4-12-14
விண்ணப்பிக்க கடைசி நாள்: 24-12-14

மேலும் விரிவான விவரங்களை அறிய பார்க்க வேண்டிய இணையதள முகவரி: www.joinindiannavy.gov.in.

Leave a comment

Your email address will not be published.


*