மொபைல்களுக்கு மட்டுமின்றி லேண்ட்லைன் போன்களுக்கும் இலவசமாக பேசுவதற்கு கால் பிளஸ் அறிமுகம்

மொபைல்களுக்கு மட்டுமின்றி லேண்ட்லைன் போன்களுக்கும் இலவசமாக பேசுவதற்கு கால் பிளஸ்  அறிமுகம்

நியூயார்க்: மொபைல்களுக்கு மட்டுமின்றி லேண்ட்லைன் போன்களுக்கும் இலவசமாக பேசுவதற்கு கால் பிளஸ் என்ற அப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆண்டிராய்டு மற்றும் ஆப்பிள் இயங்குதளங்களில் பயன்படுத்தக்கூடிய இந்த அப் மூலம் அமெரிக்கா, மெக்சிகோ, சீனா, பிரேசில், வங்கதேசம் நாடுகளை சேர்ந்த எண்களுக்கும் இந்தியாவில் உள்ள எண்களுக்கும் பேசமுடியும். வைபர் போன்ற அப்களில் பேசுவதற்கான வசதி இருந்தும், பேசும் இருவருமே இந்த அப்பை நிறுவியிருக்க வேண்டும். ஆனால், கால் பிளஸ்-ல் எண்களுக்கு நேரடியாக பேசலாம் என்பதால், அழைப்பை பெறுபவர் இந்த அப் நிறுவியிருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால், இந்தியாவுக்குள் இலவசமாக பயன்படுத்த முடியாது.

Thanks to : dinakaran

Leave a comment

Your email address will not be published.


*