கிங்டொம் எதிர்கொள்ளும் சவால்கள்..!!

கிங்டொம் எதிர்கொள்ளும் சவால்கள்..!!

கிங்டொம் ஒப் சவுதி அரேபியா. நேற்று வரை அசைக்க முடியாத பாலைவன சாம்ராஜ்யம். இப்போது அசையப்பார்க்கிறது. இல்லையில்லை. அசைக்கப்பார்க்கிறார்கள். மன்னர் அப்துல்லாஹ் முன் நான்கு பிரச்சனைகள் ஆட்சியதிகாரம் தொடர்பில் பிரதானமானவையாக எழுந்து நிற்கின்றன. இஸ்லாமிய அரசின் (IS) இராணுவ முன்னேற்றங்கள், அடுத்த வாரிசு தொடர்பான உள்வீட்டு குமுறல்கள், மனித உரிமை ஜனநாயகம் பற்றிய போராட்டங்கள், கிழக்கு பிராந்திய ஷியாக்களின் எழுச்சி என்பனவே அவை. நீண்டகாலமாக சவுதி அரேபிய மக்களை உதைபந்தாட்ட நிகழ்ச்சிகளிலும், தேசிய தின வைபவங்களிலும் திளைக்க வைத்து மன்னராட்சியின் மாயங்கள் இப்போது எடுபடுபதில்லை.

இவை தொடர்பாக எதிர்வரும் காலங்களில் தனிப் பதிவுகளை இன்ஷாஅல்லாஹ் பதிவிடுவோம். இஸ்லாமிய அரசு தன்னை கிலாபாவாக பிரகடனம் செய்தனை சவுதி அரேபியாவின் மன்னராட்சிக்கு பெரிய சவால். பல நூறு சவுதி அரேபிய இளைஞர்கள் சிரியாவில் நடக்கும் சண்டைகளில் தங்களை முழுதாக அர்ப்பணித்துள்ளார்கள். அவர்களில் பலர் இப்போது (IS)-ன் தலைமையிடம் பையத் செய்துள்ளனர்.

அத்தோடு அவர்கள் நிற்கவில்லை, தங்கள் உளவினர்கள் நண்பர்கள் என சவுதி அரேபியாவில் உள்ளவர்களையும் பையாவை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றனர். பல்லாயிரம் சவுதியர்கள் பையத் செய்யும் தயார்நிலையிலும் மனோநிலையிலும் மாறியுள்ளனர். இது சவுதி அரேபிய அரசின் உளவமைப்பால் அறிக்கையாகவே மன்னரின் கரங்களிற்கு அனுப்பப்பட்டுள்ளது. சவுதியர்களின் இஸ்லாமிய அரசு பற்றிய விசுவாசம் மன்னராட்சிக்கு எதிரான செயற்பாடுகளிற்கான ஆதரவு தளங்களை உருவாக்க அனுமதிக்கும் என்பதை ஆட்சியாளர்கள் நன்குணர்ந்துள்ளனர். அதனாலேயே மன்னர் அப்துல்லாஹ் சிரிய, ஈராக் களங்களில் இருந்து திரும்பி வரும் முஜாஹித்களிற்கான பொது மன்னிப்பையும், அப்படி வராதவர்களிற்கான 09 வருட் சிறைத்தண்டனையையும் பற்றி பகிரங்கமாக அறிவிப்பு செய்திருந்தார். மன்னர் அப்துல்லாஹ்வின் இறுதிக்காலங்கள் இவை.

மன்னர் சில முறை கடும் சகவீனமுற்ற நிலையில் மக்கள் முன் தோன்ற முடியாத அளவு சரிவுகளை சந்தித்திருந்தார். தனக்கு பின்னரான ஆட்சியாளராக கிறவுன் பிரின்ஸ் வருவார் எனும் சாஸனம் இருந்த போதும் அதற்கான போட்டியாளர்களாக மூவர் எழுந்துள்ளனர். இவர்கள் தங்களிற்கான அரசியல் இராணுவ, மத அறிஞர்கள் போன்ற அணிகளை கொண்டுள்ளனர். ஆட்சிக்கதிரைக்கான போட்டிகளும், அரசியல் சித்து வேலைகளும் அரண்மனைகளில் ஆரம்பமாகி விட்டன. சவுதியில் பெண்ணுரிமை, மனித உரிமை போன்றவை தொடர்பாக சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. பெண்கள் தாங்கள் கார் செலுத்தும் உரிமையுடையவர்கள் என அரசிற்கும், ஆட்சியாளர்களிற்கும் எதிராக போராட்டம் நடாத்தும் அளவிற்கு நிலைமைகள் சென்றுள்ளன.

இந்த போலி ஜனநாயக போராட்டங்களின் பின்னால் மேற்கு நாடுகளின் சதி பரந்துள்ளது. எண்ணை வர்த்தகத்தில் சவுதி அரேபிய அரசோடு மிக நெருக்கமாக செயற்படும் அதே தேசங்களே சவுதி அரேபியாவினுள் மனித உரிமை, பெண்ணியம் போன்ற செயற்பாடுகளை விஸ்தரித்துள்ளளன. இதன் பின்னால் ஒரு பெரிய செய்தி உள்ளது. மக்கள் மன்னராட்சியினை வெறுத்துள்ள நிலையில் அதற்கு பகரமாக அமீருல் முஃமினீன் என தன்னை தானே பிரகடனம் செய்துள்ள இஸ்லாமிய அரசின் தலைவரை தங்கள் தேர்வாக எடுத்து விடும் அபயாம் இருப்பதனால், அதற்கு செக் வைக்கும் நோக்குடன் சவுதி அரேபியாவில் ஐனநாயக குடியரசை உருவாக்கும் பெரும் பணியை இந்த நாடுகள் செய்து வருகின்றன.

சுவுதியர்களை ஜனநாயகத்தின் பால் இட்டுச் செல்வதற்கான அடிப்படை வேளைகளின் வெளிப்பாடே இந்த பெண்கள் போராட்டம். ஹிஜாஸ் பிராந்தியத்தில் வாழும் ஷியாக்கள் பல போராட்டங்களை தொடராக நடாத்தி வருகின்றனர். இவர்களது இந்த போராட்டங்கள் பற்றிய செய்திகளை சவுதி அரேபிய அரசு தணிக்கை செய்திருந்தாலும் அங்கு அரச எதிர்ப்புணர்வு என்பது இப்போது வீதிகள் வரை வந்து நிற்கிறது. அங்குள்ள ஷியாக்களின் மத்தியில் ஒரு இராணுவ இயந்திரம் இருப்பது பற்றிய பதிவை நாம் இதற்கு முன்னர் பதிவிட்டிருந்தோம்.

இதன் உச்சமாக ஷியாக்களின் உயர் மதத்தலைவரை கைது செய்துள்ளது சவுதி அரசு. யெமனில் உருவாகியுள்ள இராணுவ மேலான்மை நிலையானது ஷியாக்களிற்கு சவுதி அரேபியாவில் பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. என்றுமில்லாதவாறு இம்முறை அவர்கள் ஆசூறா தினத்தை கர்பலா நினைவு கூறல் நிகழ்வுகளாக பெருமெடுப்பில் நடாத்தி முடித்துள்ளனர். லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாஹ் கட்டமைப்பு போன்று யெமனில் அதனை உருவாக்க ஹிஸ்புல்லாஹ் ஆலோசகர்கள் அணியொன்று இப்போது சன்னாவில் தளமமைத்து தொழிற்படுகிறது.

அதையொத்த ஒரு இராணுவ அமைப்பை சவுதியின் எண்ணை வளமிக்க கிழக்கு பிராந்தியங்களில் உருவாக்குவதற்கான வேலைகள் ஆரம்பமாகிவிட்டன. சமாகாலத்தில் பெரும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் நிலைக்கு மன்னர் தள்ளப்பட்டுள்ளார். இதன் போது அவர் வசம் இருந்த மன்னர் எனும் ஆளுமை அல்லது மித் சரிவு காண ஆரம்பித்துள்ளது.

thanks to : http://khaibarthalam.blogspot.in/

Leave a comment

Your email address will not be published.


*