சென்னையில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற பாபரி மஸ்ஜித்தின் நீதிக்கான மாபெரும் ஆர்ப்பாட்டம்!

சென்னையில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற பாபரி மஸ்ஜித்தின் நீதிக்கான மாபெரும் ஆர்ப்பாட்டம்!

சென்னையில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற பாபரி மஸ்ஜித்தின் நீதிக்கான மாபெரும் ஆர்ப்பாட்டம்!

டிசம்பர் 06, 1992 அன்று 465 ஆண்டுகளாக தலைநிமிர்ந்து நின்ற வரலாற்று சின்னமான பாபரி மஸ்ஜிதை பாசிஸ பயங்கரவாதிகள் பட்டபகலில் இடித்து தரைமட்டமாக்கினர். இடிக்கப்பட்டது ஓர் வழிப்பாட்டு தளம் மட்டுமல்ல, நம் தேசம் கட்டமைக்கப்பட்ட மத சார்பற்ற கொள்கையும் அதன் மதிப்புகளும் சேர்ந்தே இடிக்கப்பட்டது. இந்துத்துவ சக்திகள் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை காற்றில் பறக்க விட்டு அல்லது மீறி பழமையான மஸ்ஜிதை இடித்து தள்ளினார்கள். மத்திய அரசும் மாநில அரசும் தங்களை பார்வையாளர்களாக மட்டுமே இருந்தனர்.

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதை விசாரித்த மத்திய அரசு நியமித்த லிபர்ஹான் கமிஷன் 17 வருடங்களாக நீண்ட விசாரணை நடத்தி தனது அறிக்கையை சமர்ப்பித்தது. ஆனால் இன்றுவரை ஆட்சியில் இருந்த எந்த அரசாங்கமும் அமல்படுத்தவுமில்லை,கமிஷனால் குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்படவுமில்லை. இது நாட்டின் மதச்சார்பற்ற கொள்கைக்கு செய்யும் மிகபெரிய துரோகம். எனவே பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தில் மீண்டும் மஸ்ஜித் கட்டப்படவேண்டும். இடித்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று (06-12-2014) காலை 11 மணிக்கு நீதிக்கான மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநில துணைத்தலைவர் M. முஹமது ஷேக் அன்சாரி அவர்கள் தலைமையேற்று உரையாற்றினார்.

தென் சென்னை மாவட்ட செயலாளர் அஜீஸ் அவர்கள் தொகுப்புரை வழங்கினார். வட சென்னை மாவட்ட செயலாளர் அப்துல் ரஜாக் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். தென் சென்னை மாவட்ட தலைவர் நாகூர் மீரான் அவர்களும், வட சென்னை மாவட்ட தலைவர் ரபீக் ராஜா அவர்களும் பாபரி மஸ்ஜித் குறித்து சிற்றுரையாற்றினர்.

3

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநில தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில், SDPI கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாக்கவி, ஆல் இந்தியா இமாம் கவுன்சில் மௌலவி J. முஹம்மது இப்ராஹிம் மிஸ்பாஹி ஆகியோர் கலந்து கொண்டு கண்டனயுரையாற்றினர்.

தென் சென்னை மாவட்ட செயலாளர் அப்துல்லா அவர்கள் நன்றியுரையாற்றினார்.இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு

நாகூர் மீரான் ,

தென் சென்னை மாவட்ட தலைவர் ,

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ,

தமிழ்நாடு

Leave a comment

Your email address will not be published.


*