வாட்ஸ் அப்பில் “வாய்ஸ் கால்” – 2015 ஆம் ஆண்டிலிருந்து அறிமுகம்!

வாட்ஸ் அப்பில் “வாய்ஸ் கால்” – 2015 ஆம் ஆண்டிலிருந்து அறிமுகம்!

வாய்ஸ் கால் சேவை சரியாக தொடங்குவது காரணமாக தொய்வு ஏற்பட்டுள்ளது. புதிய அம்சங்களுடன் பயன்பாட்டுக்கு வாட்ஸ் அப் வெளியிடுவதில் தொழில்நுட்ப பிரச்சனை உள்ளது என்றும் அதனை சரிசெய்வதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட செல்போன்களில் இருந்து ஒலிவாங்கி தொடர்பான குறைபாடு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய அம்சங்கள் வாட்ஸ் அப் 4.5.5 பதிப்பில் வெளியாகுகிறது. ஏப்ரல் மாதத்தில் இத்தகைய சேவையை வாடிக்கையாளர்கள் பெற முடியும் என்று கூறப்படுகிறது.

இத்தகைய சேவை அளிக்கப்பட்டால் செல்போன் சேவை அளிக்கும் நிறுவனங்களின் வருவாயை வெகுவாக பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே சீனாவின் விசாட், கொரியாவின் காகோடாக், இஸ்ரேலின் விபர் ஆகிய நிறுவனங்கள் வாய்ஸ் கால் சேவையை அளிப்பதால் அந்தந்த நாடுகளில் உள்ள செல்போன் சேவை நிறுவனங்களின் வருமானம் வெகுவாகக் குறைந்துள்ளது.

Leave a comment

Your email address will not be published.


*