டிப்ளமோ, பட்டதாரிகளுக்கு ரயில்வே துறையில் 1317 இடங்கள்

டிப்ளமோ, பட்டதாரிகளுக்கு ரயில்வே துறையில் 1317 இடங்கள்

இந்திய ரயில்வே துறையில் அலகாபாத், அகமதாபாத், ஆஜ்மீர், போபால், பெங்களூர், பிலாஸ்பூர், சண்டிகார், கோரக்பூர், ஜம்மு, ஸ்ரீநகர், கொல்கத்தா, மும்பை, மெய்டா, ராஞ்சி, செகந்திராபாத், திருவனந்தபுரம், கவுகாத்தி, சென்னை, சிலிகுரி ஆகிய மையங்களில் உள்ள 1317 காலியிடங்களுக்கு ரயில்வே பணியாளர்கள் வாரியத்தின் சார்பில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தென்னக ரயில்வே, வடக்கு மத்திய ரயில்வே, வடக்கு ரயில்வே, வடமேற்கு ரயில்வே, தென்மேற்கு ரயில்வே உள்ளிட்ட மேற்குறிப்பிடப்பட்ட மையங்களில் ஸ்டெனோகிராபர்/ ஜூனியர் ஸ்டெனோகிராபர் (இந்தி), ஸ்டெனோகிராபர்/ ஜூனியர் ஸ்டெனோகிராபர் (ஆங்கிலம்), தலைமை சட்ட உதவியாளர்/ சட்ட உதவியாளர், ஜூனியர் டிரான்ஸ்லேட்டர் (இந்தி), ஸ்டாப் மற்றும் வெல்பேர் இன்ஸ்பெக்டர், நூலகர், நூலக தகவல் உதவியாளர், கேட்டரிங் இன்ஸ்பெக்டர் (கமர்சியல்), கமர்சியல் குக், ஹெட்குக் ஹார்ட்டிகல்சர் அசிஸ்டென்ட் பீல்டு மென், பப்ளிசிட்டி இன்ஸபெக்டர், சீனியர் பப்ளிசிட்டி இன்ஸ்பெக்டர், ஃபிங்கர் பிரின்ட் எக்சாமினர், போட்டோகிராபர், சயின்டிபிக் சூபர்வைசர், சயின்டிபிக் அசிஸ்டென்ட், ஆர்ட்டிஸ்ட், லேப் அசிஸ்டென்ட், டிரெய்ன்டு கிராஜூவேட் டீச்சர், பிரைமரி டீச்சர் ஆகிய 1317 இடங்களுக்கு எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

கல்வித்தகுதி:

மெட்ரிகுலேசனுடன் சுருக்கெழுத்து/ பிளஸ் 2/ சட்ட பாடத்தில் பட்டப்படிப்பு/ முதுநிலை பட்டம் ஆகியவற்றில் சம்பந்தப்பட்ட பணிக்கு ஏற்ற கல்வித்தகுதி. விண்ணப்பதாரர்கள் ஒரே ஒரு ரயில்வே பணிக்கு மட்டும் தான் விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்ப கட்டணம்:

ரூ.100 (எஸ்சி., எஸ்டி., முன்னாள் ராணுவத்தினர், பெண்கள், சிறுபான்மையினர் ஆகியோருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது)
விண்ணப்பத்தை சாதாரண தபாலில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை மற்றும் கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட ரயில்வே துறை இணையதளத்தை பார்க்கவும்.

உதாரணமாக தென்னக ரயில்வேயில் (சென்னை, திருவனந்தபுரம்) உள்ள காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் www.rrbchennai.gov.in மற்றும் www.rrbthiruvananthapuram.gov.in ஆகிய இணைய தளங்களை பார்க்கவும்.

தென்னக ரயில்வே சென்னைக்கு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

The Assistant Secretary,
Railway Recruitment Board,
No.5, Dr.PV Cheriyan Crescent Road,
Behind Ethiraj College,
Egmore,
Chennai 600 008.
Tamilnadu.

தென்னக ரயில்வே திருவனந்தபுரத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

The Assistant Secretary,
Railway Recruitment Board,
Thampanoor,
Thiruvananthapuram 695001.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.11.2014.

Leave a comment

Your email address will not be published.


*