ஸ்டீல் அதாரிடி ஆப் இந்தியாவில் வேலை

ஸ்டீல் அதாரிடி ஆப் இந்தியாவில் வேலை

ஸ்டீல் அதாரிடி ஆப் இந்தியா எனப்படும் செய்ல் நிறுவவனம் நமது நாட்டின் பொதுத்துறை சார்ந்த ஒரு மகாரத்னா நிறுவனமாகும். இரும்பு உற்பத்தியில் உலகளவில் பிரசித்தி பெற்ற இந்த நிறுவனத்திற்கு நாட்டில் பல்வேறு பகுதிகளில் உற்பத்தி மையங்கள் உள்ளன.
நாட்டின் உள்கட்டுமானப் பணிகள், பொறியியல், எரிசக்தி, ரயில்வே, ஆட்டோமோடிவ் மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கான இரும்பு உற்பத்தி செய்வதில் இந்த நிறுவனம் புகழ் பெற்று திகழ்கிறது. இந்த நிறுவனத்தின் துர்காபூர் கிளையில் காலியாக உள்ள ஆப்பரேட்டர் கம் டெக்னீசியன் மற்றும் அட்டென்டன்ட் கம் டெக்னீசியன் டிரெய்னி காலியிடங்கள் 258ஐ நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது: செய்ல் நிறுவனத்தின் பயிற்சியாளர் பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் அதிகபட்சம் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: ஆப்பரேட்டர் கம் டெக்னீசியன் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் மெக்கானிகல், எலக்ட்ரிகல், மெட்டலர்ஜி, சிவில், கெமிக்கல், எலக்ட்ரானிக்ஸ் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் பிளஸ்2 படிப்பிற்குப் பின்னர் 3 வருட டிப்ளமோ படிப்பாக முடித்திருக்க வேண்டும். அட்டென்டன்ட் கம் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் பத்தாம் வகுப்புக்கு பின்னர் பிட்டர், எலக்ட்ரீசியன், வெல்டர் ஆகிய ஏதாவது ஒரு ஐ.டி.ஐ., சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை: ஆபரேட்டர் கம் டெக்னீசியன் பதவிக்கு ரூ.250/-ம், அட்டென்டன்ட் கம் டிரெய்னி பதவிக்கு ரூ.150/-ம் விண்ணப்பக் கட்டணமாக பாரத ஸ்டேட் வங்கி துர்காபூர் மையத்தின் Power Jyoti Current account No. 32336462661 என்ற அக்கவுண்ட் எண்ணில் செலுத்த வேண்டும். விண்ணப்பங்களை ஆன்-லைன் முறையில் பதிவு செய்ய வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 08.10.2014
இணையதள முகவரி: http://103.241.144.18/saildporeg/Document/AdvtPDF/Operator-Cum-Technician(Trainee).pdf

thanks to : dinamalar.com

Leave a comment

Your email address will not be published.


*