இஸ்ரேல் காஸா யுத்தத்தில் எதிர்பார்க்காத திருப்பு முனை “டெல்-அவிவ் மக்கள் எழுச்சி” – தோல்வியின் பாதையின் முதல் மைற்கல் !!

இஸ்ரேல் காஸா யுத்தத்தில் எதிர்பார்க்காத திருப்பு முனை “டெல்-அவிவ் மக்கள் எழுச்சி” – தோல்வியின் பாதையின் முதல் மைற்கல் !!

சுமார் மூன்று வாரங்களுக்கு முன்னர் காசா மீதான இஸ்ரேலிய அரசாங்கத்தின் குண்டுவீச்சு தொடங்கியதிலிருந்து, இஸ்ரேல் மற்றும் ஆக்கிரமிப்பு பிராந்தியங்களில் போராட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அந்த குண்டுவீச்சை ஆதரிக்கும் பல்வேறு வலதுசாரி குழுக்களும் யுத்தத்திற்கு எதிரான போராட்டங்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டுகின்ற நிலையில், காசா மற்றும் ஆக்கிரமிப்பு பிராந்தியங்கள் மீதான அதன் நடவடிக்கை பரந்த பெரும்பான்மை இஸ்ரேலிய சமூகத்தால் ஆதரிக்கப்படுவதாக கூறப்படும் இஸ்ரேலிய அரசாங்கத்தின் வாதங்களில் இருக்கும் பொய்யை இந்த போராட்டங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

சனியன்று, இஸ்ரேலின் பிரதான நிதியியல் மையமான டெல் அவிவ்வின் முக்கிய பகுதியில் 5,000இல் இருந்து 10,000 வரையிலானவர்கள் ஒன்றுதிரண்டனர். அந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், “யூதர்களையும்,அரேபியர்களையும் எதிரிகளாக இருக்க செய்வதை நிராகரிக்கிறோம்”, “படுகொலைகள் போதும்”, “தூண்டிவிடுபவர்களின் ஒரு அரசாங்கம் எங்களுக்கு வேண்டாம்” என்றும் மற்றும் ஏனைய போர் எதிர்ப்பு முழக்கங்களையும் கூறி கூச்சலிட்டார்கள்.

காசா பகுதியிலிருந்து ராக்கெட் வீசப்படக்கூடிய அச்சங்கள் இருப்பதைக் காரணங்காட்டி, பொலிஸ் தொடக்கத்தில் அந்த போராட்டத்தைக் கலைக்க முயன்றது. “இஸ்ரேலிய பொலிஸ் பேச்சு சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் மதிப்புகளைப் பாதுகாக்கவே வேலை செய்கிறது, இருப்பினும் தற்போதைய சூழலில், மனித உயிர்களைக் காப்பாற்றுவதே எங்களின் கடமைப்பாட்டின் முன்னுரிமையில் இருக்கிறது,” என்று ஓர் உத்தியோகபூர்வ அறிக்கை குறிப்பிட்டது.

இருந்த போதினும், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன அரசாங்கங்களுக்கு இடையிலான விரோதங்களில் ஒரு சிறிய 12 மணிநேர போர் நிறுத்தம் ஒப்புக் கொள்ளப்பட்டதும், அந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.பின்னர், பல நூறு வலதுசாரி ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்-போராட்டங்களை நடத்தியதும் மற்றும் போர்நிறுத்தம் முடிவுக்கு வந்ததும், பொதுமக்களின் பாதுகாப்புக்காக என்ற அடித்தளத்தில் அந்த ஆர்ப்பாட்டங்களை முடிவுக்குக் கொண்டு வர பொலிஸ் தலையீடு செய்தது.

வாரயிறுதி முழுவதிலும் ஆக்கிரமிப்பு மேற்கு கரையில் ஏனைய ஒன்றுகூடல்கள் நடந்தன, அங்கே சுமார் ஒரு தசாப்தத்தில் முதல்முறையாக மஹ்மொத் அப்பாஸின் பாலஸ்தீன ஆணைய அரசாங்கம் காசா முற்றுகைக்கு எதிரான போராட்டங்களை அனுமதித்திருந்தது.

வெள்ளியன்று, வடக்கு இஸ்ரேலில் அமைந்துள்ள உம் அல்-ஃபாஹ்ம் (Umm al-Fahm) நகரில் 3,000 பேர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஹைய்பாவிற்கு அருகில் உள்ள ஒரு இஸ்ரேலிய-அரபு நகரமான இஃபுரிடிஸில் குண்டுவீச்சுக்கு எதிராக 1,000 பேர் மற்றொரு பேரணி நடந்தினார்கள். Israel Hayom பத்திரிகை செய்தியின்படி, பல ஆர்ப்பாட்டக்காரர்கள், “இங்கே அரபு நாடுகளின் மனசாட்சி அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது, அவை காசாவாசிகளின் துன்பங்களை நிறுத்த ஒன்றுமே செய்யவில்லை,” என்று எழுதப்பட்ட சுலோகங்களோடு சவப்பெட்டிகளைச் சுமந்து சென்றார்கள்.

உத்தியோகபூர்வமாக அனுமதிக்கப்பட்ட போராட்டங்களையும் மீறி அங்கே மக்கள் எதிர்ப்பு வெடிக்கக்கூடும் என இஸ்ரேலிய மற்றும் அரபு ஆளும் ஸ்தாபகத்திற்குள் அச்சங்கள் நிலவுகின்றன. ரமால்லாவின் அல்-அமாரி அகதிகள் முகாமில் 15,000 பேர் பங்கு பெற்ற ஒரு பேரணி போராட்டத்தில் IDFதுப்பாக்கி சூடு நடத்தியதில் ஒரு இளைஞர் கொல்லப்பட்டார் மற்றும் டஜன் கணக்காக பலர் காயமடைந்தார்கள். “காயமடைந்தவர்கள் எல்லோருமே அந்த இடத்திலேயே படைத்தளவாடங்களால் தாக்கப்பட்டிருந்ததாக” பாலஸ்தீன சுகாதார அமைச்சக அதிகாரி ஒசாமா அல்-நஜ்ரார் ஜெருசலேம் போஸ்டிற்குத்தெரிவித்தார்.

வியாழக்கிழமையில் இருந்து, இஸ்ரேல் பாதுகாப்பு படை (IDF) துருப்புகளோடு நடந்த மோதல்களில் இஸ்ரேலில் எட்டு பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள், அந்த ஆர்ப்பாட்டக்காரர்களை சமாளிக்க “கலகம் கலைப்பதற்கான கருவிகளை” பயன்படுத்தி வருவதாக கூறப்பட்டது.நப்லாசில், 18 வயதான காலெட் அஜ்மி ஒடெஹ் அங்கே குடியமர்ந்திருக்கும் ஒரு வலதுசாரி நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார், அவர் ஒரு பிரதான பொதுவழியில் அவர்கள் நடந்து சென்று கொண்டிருந்த போது அந்த இளைஞரையும் இன்னும் மூன்று நபர்களையும் துப்பாக்கியால் சுட்டார்.

ரமால்லாவில் IDFஇன் கரங்களில் அந்த இளைஞரின் படுகொலை குறித்து வர்ணிக்கையில், டைம்ஸ் இதழ் அந்த சம்பவத்தின் போது அங்கே இருந்த36 வயதான சமீரா ஹாம்தானைக் குறிப்பிட்டுக் காட்டியது. “இது உண்மையிலேயே ஒரு மூன்றாம் பாலஸ்தீன புரட்சியை (இன்டிஃபதா) போன்று தெரிகிறது என்பதைக் கூற எனக்கு வேதனையாக இருக்கிறது,”என்று ஹம்தான் கூறினார்.

IDF இடம் இருந்து வரக்கூடிய இன்னும் மேலதிக அட்டூழியங்களைக் குறித்த அச்சத்தோடு, ஹாம்தான் தொடர்ந்து கூறுகையில், “இதற்கு அர்த்தமென்னவென்றால் இதற்கு முன்னர் இருந்ததை விட இன்னும் அதிகமான மரணங்களும், கடுமையான நடவடிக்கைகளும் என்பதாகும்.ஆனால் இது வெறுமனே காசாவோ அல்லது மொஹம்மத் அபு கஹ்திரோ மட்டும் சம்பந்தப்பட்டதல்ல. வீடுகளில் அதன் இரவுநேர படையெடுப்புகள்,விடுவிக்கப்பட்ட கைதிகளை மீண்டும் சிறையில் அடைப்பது, மற்றும் இன்னும் மேலதிகமான மரணங்கள் இவையனைத்தும் பாலஸ்தீனியர்களை வெடித்தெழ செய்திருக்கிறது,” என்றார்.

Thanks to : http://khaibarthalam.blogspot.in/2014/07/blog-post_32.html

Leave a comment

Your email address will not be published.


*