காஸா மருத்துவமனையில் பணியாற்றிவரும் நோர்வே நாட்டு மருத்துவர் கில்பர்ட் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு கடிதம்

காஸா மருத்துவமனையில் பணியாற்றிவரும் நோர்வே நாட்டு மருத்துவர் கில்பர்ட் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு கடிதம்

gilbertகாஸா மருத்துவமனையில் பணியாற்றிவரும் நோர்வே நாட்டு மருத்துவர் கில்பர்ட் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் “ஒபாமா உங்களுக்கு இதயம் ஒன்று இருக்கிறதா? ஒரே ஒரு இரவு-வெறுமனே ஒரே ஒரு இரவு மாத்திரம் காஸா மருத்துவ மனையில் எம்முடன் இருந்து பாருங்கள். அது வரலாற்றை மாற்றிவிடும் என்று நான் 100 வீதம் நம்புகிறேன். மனமிருக்கும் எவரும் காஸா ஓர் இரவு இருந்துவிட்டு பலஸ்தீன மக்களின் படுகொலையை தடுக்க முயற்சிக்காமல் இருக்க மாட்டார். ஆனால் இரக்கமற்ற இதயமற்றவர்கள் காஸாவில் மற்றொரு படுகொலைக்கு திட்டமிடுகிறார்கள்.

இரவு முழுவதும் இரத்த ஆறு ஓடுகிறது. அவர்கள் தமது மரணத்தின் கூச்சலை இடுவதை என்னால் கேட்க முடிகிறது. உங்களால் முடியுமானதை தயவுசெய்து செய்யும். இதனை தொடர முடியாது” என்று அவர் ஒபாமாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Thanks to : dailyceylon

Leave a comment

Your email address will not be published.


*