காட்டுமிராண்டித்தனத்தில் ஹிட்லரையும் மிஞ்சி விட்டது இஸ்ரேல் – துருக்கி பிரதமர்

காட்டுமிராண்டித்தனத்தில் ஹிட்லரையும் மிஞ்சி விட்டது இஸ்ரேல் – துருக்கி பிரதமர்

தாக்குதல்களின் போது இஸ்ரேல் தனது காட்டுமிராண்டித்தனத்திலும், மூர்க்க குணத்திலும் ஹிட்லரையும் மீஞ்சி விட்டது என துருக்கி பிரதமர் ரஜப் தய்யுப் அர்தூகான் கடுமையாக குற்றம் சுமத்தியுள்ளார்.

erdogan-rationalizingகருங்கடல் பிரதேசத்தில் ஒர்டூ நகரில் பெரும் திரளான அவரது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அர்தூகான் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

“இஸ்ரேலியர்களுக்கு எந்த மனசாட்சியோ, மரியாதையோ, மனித நேயமோ அல்லது நேர்மையோ கிடையாது. இரவு பகலாக ஹிட்லரை விமர்சிக்கும் அவர்கள் தற்போது, காட்டுமிராண்டித்தனத்திலும், மூர்க்க குணத்திலும் ஹிட்லரையும் மீறிவிட்டனர். இஸ்ரேலின் இந்த நடவடிக்கை துருக்கி – இஸ்ரேல் இடையேயான உடன்படிக்கையை கடுமையாக பாதித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Thanks to : Puttalamtoday

Leave a comment

Your email address will not be published.


*