குப்பை பொறுக்கும் சிறுமியை கற்பழிக்க முயன்ற போலீஸ்காரர் கைது…!!!

குப்பை பொறுக்கும் சிறுமியை கற்பழிக்க முயன்ற  போலீஸ்காரர் கைது…!!!

குப்பை பொறுக்கும் சிறுமியை கற்பழிக்க முயன்ற போலீஸ்காரர் கைது…!!!

உத்தரப்பிரதேசம் மாநிலம், மதுரா நகர் ரெயில் நிலையத்தின் பிளாட்பாரம் ஒன்றில் அப்பகுதியில் குப்பை பொறுக்கும் 11 வயது சிறுமி கடந்த சனிக்கிழமை தனியாக படுத்திருந்தார்.

மக்கள் நடமாட்டம் ஓய்ந்த நேரத்தில் அவளை நெருங்கிய ரெயில்வே பாதுகாப்பு சிறப்புப் படை போலீஸ் கான்ஸ்டபிள் விகாஸ் என்பவர் அந்த சிறுமியை கற்பழிக்க முயன்றார். தூக்கத்தில் இருந்த சிறுமி பதறிப் போய் விழித்து போட்ட கூச்சலையடுத்து மற்ற பிளாட்பாரங்களில் பணியில் இருந்த ரெயில்வே போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கு ஓடி வந்தனர்.

அவர்களில் ஒருவர் விகாசை விரட்டிச் சென்ற போது, தப்பியோடிய அந்த காமுகன் மதுரா ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள காவலர்கள் தங்கும் அறைக்குள் புகுந்து ஒளிந்துக் கொண்டான்.

இச்சம்பவம் தொடர்பாக சிறுமி அளித்த வாக்குமூலத்தை புகாராக பதிவு செய்த ரெயில்வே போலீசார், விகாசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பிடிபட்ட விகாஸ் ஏற்கனவே 24 மணி நேரம் சிறையில் அடைபட்டு கிடந்ததால், அரசு ஊழியர் நன்நடத்தை விதிகளின்படி, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்களையும், சிறுமிகளையும் பாதுகாத்து காப்பாற்ற கடமைப்பட்டிருக்கும் போலீஸ்காரர் ஒருவரே, ‘பயிரை மேய்ந்த வேலி’ கதையாக குப்பை பொறுக்கும் பெண் என்றும் பாராமல் 11 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கிய சம்பவம் மதுரா நகரில் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

Thanks to :flash news reporter : Yousuf Riaz via IQRA.net

Leave a comment

Your email address will not be published.


*