உச்சநீதிமன்ற தீர்ப்பும் விசித்திரமான காரணங்களும்

உச்சநீதிமன்ற தீர்ப்பும் விசித்திரமான காரணங்களும்
 judegementமத்திய பிரதேசத்தில் கடந்த 2010 மே 7 ஆம் தேதி குலாம் முஹம்மது என்பவரின் இரண்டு குழந்தைகளுக்கு சந்தோஷ் குமார் சிங் என்பவன் டியூஷன் சொல்லி கொடுக்க சென்றபோது அந்த இரு குழந்ததைகளையும் குலாம் முகம்மதுவின் மனைவியையும் இரும்பு சுத்தியலால் கொடூரமான முறையில் தாக்கி கொன்று விட்டு வீட்டில் இருந்த நகை பணம் ஆகிவற்றை சுருட்டிக்கொண்டு ஓடிவிட்டான். இந்த வழக்கை விசாரித்த கீழ் கோர்ட் இந்த கொடூரனுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்பளித்தது. இதை உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து இந்த மிருகம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளான். இவனது தூக்குதண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக குறைத்த உச்சநீதிமன்றம் அதற்கு சொன்ன காரணம் தான் உச்ச கட்ட கொடுமை.

மூன்று பேரை கொடூரமாக கொன்ற இந்த மனித மிருகம் பால்குடி மறவாத 26 வயது பாலகனாம். மேலும் அவர் நன்கு படித்த பட்டதாரியாம். அதனால் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்பளித்துள்ளது உச்சநீதிமன்றம்.

Leave a comment

Your email address will not be published.


*