ரமழான் அறப்போரின் மாதம்

ரமழான் அறப்போரின் மாதம்

ரமழான் அறப்போரின் மாதம்

வல்ல இறைவனுக்கு… முழுமையாகக் கட்டுப்பட வேண்டும் என்னும் உணர்வை ரமழான் மாதம் தோற்றுவிக்கின்றது. இறைவனுக்கு நாம் அடிபணிவதோடு இந்த உலகத்தையும் உலக மக்களையும் அடிபணிந்து வாழுமாறு அழைக்கவேண்டும் என்னும் உத்வேகத்தையும கொடுக்கின்றது.

‘அல்லாஹ்வின் கலிமா மேலோங்கவேண்டும்’ என்பதைத் தான் ஜிஹாதின் இலக்கணமாக அண்ணல் நபிகளார் ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வகுத்துள்ளார்கள்.

நோன்பு, ஆன்மாவிற்கு வலிமையையும் செயல்படத் தூண் டும் ஆற்றலையும் அளிக்கின்றது. ஆன்ம உயிரோட்டத்திற்கு உத்வேகமும் உறுதிப்பாடும் கிடைப்பதால் அவற்றைக் கொண்டு இறைவழிபாட்டின் பக்கமும் இறைவனுக்கு கீழ்ப் படிதலின் பக்கமும் முஃமின் தானும் முன்னேற எண்ணு கிறான். மற்றவர்களையும் அழைக்க எண்ணுகிறான்.

நோன்புக் காலத்தில் இந்த உத்வேகம் பன்மடங்கு பெருகுவ தால்தான் இறைஉதவியும் அக்காலத்தில் வியக்கத்தக்க அளவில் வந்து சேருகின்றது. ரமழான் மாதத்தில்தான் பத்ருப்போர், மக்கா வெற்றி, ஃபலஸ்தீன வெற்றி, ஹித்தீன் போர், ஐன் ஜாலூத் யுத்தம் போன்ற பல யுத்தங்கள் நடைபெற்றுள்ளன.

ஆனால், இன்றோ இவையாவும் வழக்கொழிந்து போய்விட் டனவோ என்று விசனப்படும் நிலையே நிலவுகின்றது. இஸ்லா மின் கரங்களில் இருந்து அரசாட்சி விடைபெற்றுச் சென்ற தோடு இவையனைத்தும் அகன்று விட்டன. எண்ணிப் பாருங் கள்.

நம்முடைய காலத்திலும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் இஸ்லாமிய மறுமலர்ச்சிக்கான தீவிர முயற்சிகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. யுத்தங்களும் ஆங்காங்கே தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வருடந்தோறும் ரமழான் மாதம் வழக்கம்போல் வந்து செல்கின்றது. சொல்லிக்கொள்ளும்படி யாதொரு மாற்றமும் நிகழக் காணோம்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் ஆஃப்கன் மண்ணில் அமெரிக் கா ஆக்கிரமிப்பு யுத்தத்தைத் தொடங்கி பயங்கர குண்டுகளை வீசியது. உலகமெங்கினும் உள்ள முஸ்லிம்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பினார்கள். அப்போது, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் ‘இஸ்லாமிய வரலாற்றில் ரமழான் மாதத்தில் போர் நடப்ப தொன்றும் புதிதல்லவே’ எனக் கூறினார். அவர் சொன்ன தென்னவோ உண்மைதான். ஆனால், அவர் பொய்யர்.

‘நீங்கள் இறைவனின் தூதராவீர் என நாங்கள் சாட்சியம் அளிக்கிறோம்’ என இந்நயவஞ்சகர்கள் (நபியே) உம்மிடம் வரும்போது கூறுகிறார்கள். நீங்கள் அல்லாஹ்வின் தூதர்தாம் என்பதை அவன் நன்கறிவான். ஆனால், இந்த நயவஞ்சகர்கள் பெரும் பொய்யர்கள் என அல்லாஹ் சாட்சியம் அளிக்கிறான்’ (அல்குர்ஆன் 63-1)

ரமழானில் நிகழ்ந்த முக்கியமான போர்களைக் காண்போம்.

(1) பத்ருப்போர்

மதீனாவில் இஸ்லாமிய ஆட்சி நிலைகொண்ட பின்பு, அதை இல்லாதொழிக்க வேண்டும் என்பதற்கான தீவிர முயற்சிகளில் குறைஷியர்கள் இறங்கினார்கள். ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு, ரமழான் மாதம், அபு ஸுஃப்யான் தலைமையில் வணிகக் குழுவொன்று மதீனாவைக் கடந்து சென்றது. முஸ்லிம்கள் தாக்கக் கூடும் என்னும் பயத்தில் மக்காவிற்கு உதவி கோரி செய்தி அனுப்பினார் அபு ஸுஃப்யான்.

மககாவிலிருந்து ஆயிரம் பேர்கொண்ட படையொன்று ஆரவாரத்தோடு கிளம்பி வந்தது. இங்கே முஸ்லிம்கள் 313 பேர் அதனை எதிர்கொள்ள நோன்பு வைத்த றிவையில் கிளம்பி னார்கள். ரமழான் மாதம் பதினேழாம் நாள் மதீனாவிற்கு வெளியே பத்ரு என்னும் இடத்தில் இரு படைகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் இடையிலான போர். ஆயுதபாணிகளுக்கும் நிராயுதபாணிகளுக்கும் இடையிலான போர். ரமழான் மாதம் வந்தவுடன் ஒவ்வொரு முஸ்லிமும் உண்மையில் இப்போராப் பற்றி விரிவாகப் படிக்க வேண்டும். இறைநம்பிக்கையை வளர்த்துக் கொள்ள ஏராளமான விஷயங் கள் இப்போரில் அடங்கி உள்ளன.

இறையுதவி வந்து சேர்ந்தது. சத்தியம் வெற்றி பெற்றது. இறை வேதம் குர்ஆன் இப்போரை ‘யவ்முல் ஃபுர்கான்’ (சத்தியத்தை யும் அசத்தியத்தையும் பிரித்துப்போட்ட நாள்) என அழைக் கின்றது.

(2) மக்கா வெற்றி

இறையருளால் ஹிஜ்ரி எட்டாம் ஆண்டு முஸ்லிம்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியே மக்கா வெற்றி. முன்னதாக முஸ்லிம்களுக்கும் குறைஷியருக்கும் இடையில் போடப்பட்டி ருந்த ஹுதைபிய்யா ஒப்பந்தத்தை குறைஷியர்கள் மீறிவிட்ட தால் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர் கள் மக்காவை நோக்கி பெரும்படையோடு கிளம்பினார்கள்.

ரமழான் இருபதாம் நாளன்று, கத்தியின்றி ரத்தமின்றி பெருங்கொண்ட வெற்றியொன்றை இறைவன் முஸ்லிம் களுக்கு ரமழான் கொடையாக வழங்கினான். இஸ்லாமிய வர லாற்றில் மறக்கயியலாத நாளாக அன்றைய நாள் ஆகிப் போனது.

கஅபத்துல்லாஹ்வில் இருந்த 360க்கும் மேற்பட்ட சிலைகள் சுக்கு நூறாக உடைத்தெறியப்பட்டன.

அதன்பின்பே கூட்டம் கூட்டமாக மக்கள் இஸ்லாமில் நுழையலானார்கள். ‘சத்தியம் வந்தது, அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும்’ என்னும் அப்பட்ட மான பேருண்மையை உலகம் நிதர்சனமாக புரிந்து கொண்டது

இவையன்றி கீழ்வரும் போர்கள் ரமழான் மாதத்தில் நடை பெற்றுள்ளன. அவற்றைப் பற்றி விரிவாகக் காண இது தருண மல்ல. இடமுமில்லை. வரலாற்று நூற்களில் இவற்றை நீங்கள் கண்டுகொள்ளலாம். வெறும் பெயர்களை மட்டும் குறிப்பிடு கிறோம்.

(3) புவைப் வெற்றி (ரமழான், ஹிஜ்ரி 13)

(4) நவ்பா வெற்றி (ரமழான், ஹிஜ்ரி 31

(5) பிலாத்துஷ் ஷுஹதா (ரமழான், ஹிஜ்ரி 114)

(6) உமூரிய்யா வெற்றி (ரமழான், ஹிஜ்ரி 223)

(7) ஐன் ஜாலூத், ஃபலஸ்தீனம் (ரமழான், ஹிஜ்ரி 657)

(8) ஷிக்ஹப் வெற்றி (ரமழான், ஹிஜ்ரி 702)

(9) கிப்ரஸ் வெற்றி (ரமழான், ஹிஜ்ரி 829)

(10) அல்மன்சூரா யுத்தம் (ரமழான், ஹிஜ்ரி 647)

Courtesy : Abusheik Muhammed via FaceBook

Leave a comment

Your email address will not be published.


*