கெட்டவர்களின் உயிரின் நிலை :

கெட்டவர்களின் உயிரின் நிலை :

கெட்டவர்களின் உயிர் பிடுங்கப்பட்டவுடன் செத்த பிணங்களின் நாற்றத்தை விட கடுமையான நாற்றம் வெளிப்படும் என்று நபி(ஸல்) கூறிவிட்டு தனது மேலாடையை எடுத்து தனது மூக்கை பொத்திக் கொண்டார்கள்.

பிறகு கம்பளியில் சுருட்டப்பட்ட அந்த உயிரை மலக்குகள் முதலாவது வானத்திற்கு கொண்டு செல்லப்படுவார்கள். வானத்தில் உள்ள மலக்குகள் “ இந்த கெட்ட வாடையுடைய உயிர் யாருடையது என்று கேட்பார்கள்” உலகில் வாழ்ந்த ஒரு கெட்டவனுடைய உயிர் இது என்று கூறுவார்கள். தொடர்ந்து வானத்தை திறந்து விடுமாறு கூறுவார்கள். அவனுக்கு வானம் திறக்கப்படமாட்டாது. என்று கூறிய நபி(ஸல்) பின்வரும் இறைவசனத்தை ஒதினார்கள்.

“ எவர்கள் நம் வசனங்களை பொய்ப்பித்து இன்னும் (அவற்றை புறகணித்து) பெருமையடித்தார்களோ, நிச்சயமாக அவர்களுக்கு வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்படமாட்டா, மேலும், ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனபதியில் நுழையமாட்டார்கள். இவ்வாறே குற்றம் செய்வர்களுக்குக் கூலி கொடுப்போம்.” (திருக்குர் ஆன் : 7.40)

அதன் பின் இவனுடைய பெயரை பாவிகளின் பெயர்களை பதியும் (ஸிஜ்ஜீன்) என்ற ஏட்டில் எழுதி பூமியின் அடிவாரத்தில் அந்த உயிர் எடுத்து செல்லப்படும் என்று நபி(ஸல்) கூறினார்கள். ( நூல் : அபூதாவூது. நஸயி,அஹமது, ஹக்கிம்.)

“ குற்றவாளிகளின் ஏடு ஸிஜ்ஜீனில் உள்ளது. ஸிஜ்ஜீன் என்பது என்னவென உமக்கு எப்படி தெரியும் ? (அது பாவிகளின் செயல்கள்) பதிவு செய்யப்பட்ட புத்தகம்”. (திருக்குர் ஆன் 83:7-9)

– Moulavi Abdul Kader Manbayi –

Leave a comment

Your email address will not be published.


*