குரூப் -1தேர்வில் வென்று டி.எஸ் .பி பணியை தேர்ந்தெடுத்திருக்கிறார் மதுரை சாஜிதா.

குரூப் -1தேர்வில் வென்று டி.எஸ் .பி பணியை தேர்ந்தெடுத்திருக்கிறார் மதுரை சாஜிதா.
குரூப் -1தேர்வில் வென்று டி.எஸ் .பி பணியை தேர்ந்தெடுத்திருக்கிறார் மதுரை சாஜிதா.குரூப் -1தேர்வில் வென்று போலீஸ் துணை கண்காணிப்பாளர் (டி.எஸ் .பி ) பணியை தேர்ந்தெடுத்திருக்கிறார் மதுரை சாஜிதா .22வயதான இவர் இன்ஜினியரிங் படித்தவராக இருந்தாலும் ,பல்வேறு துறைகளில் முத்திரை பதித்திருக்கிறார் . !இவரது பள்ளி பருவத்தில் நிறைய பேச்சுப் போட்டி , கட்டுரைப் போட்டி ,வினாடி வினா போட்டிகளில் பரிசுகள் வாங்கி புகழ் பெற்று இருக்கிறார் .பள்ளி பருவத்திலே நிறைய பரிசுகள் பெற்றதால் ‘கலை இலக்கிய நிர்வாகத் திறன் மாணவி ‘ என்ற விருதை இருமுறை பெற்று இருக்கிறார் .இவர் 11வகுப்பு படிக்கும் போது சிக்கிம் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் கலந்து கொண்டு இளம் விஞ்ஞானி விருது பெற்றுள்ளார் .‘மண்புழுவால் மண் வளம் பெருகுகிறதா ? அல்லது மண் வளத்தால் மண்புழு பெருகுகிறதா ? என்ற ஆய்வில் பல விதமான மண்களை சேகரித்து ,பல கட்ட ஆய்வுகள் நடத்தி ‘மண்புழு இருந்தால் தான் மண் வளம் பெரும் . மண் வளம் இருந்தால் தான் மண் புழுவும் அதில் நிறைந்திருக்கும் ‘ என்பதை நிரூபித்திருக்கிறார் .+2ல் 1085 மதிப்பெண் எடுத்த இவர் விருதுநகர் காமராஜ் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியில் பி.ஈ. பயின்றார் .படிப்பை முடித்ததும் வேலைக்கு செல்லாமல் இவரது லட்சியமான அரசு உயர் அதிகாரி பணிக்காக படிக்க முயற்சி மேற்கொண்டார் .இவரது பெற்றோர் மேற்கொண்டு எம்.ஈ.படிக்க வலியுறுத்தியும் அதை மறுத்துள்ளார் . அவருக்கு கிடைத்த வங்கி வேலையையும் விரும்பவில்லை .குருப் -4தேர்வு எழுதி வேலை கிடைத்தது அதற்கும் செல்லவில்லை .வி.இ.ஓ. தேர்வில் வென்றும் அந்த வேலைக்கும் செல்லவில்லை, குரூப் -2 தேர்வு எழுதி வென்றார் .இறுதியாக குரூப் -1 தேர்வு எழுதி வென்று டி.எஸ் .பி பணியை தேர்ந்தெடுத்துள்ளார், மேயர் சைதை துரைசாமியின் மனித நேயம் பயிற்சி மையத்தில் இலவச பயிற்சி தந்ததே தன் வெற்றிக்கு காரணம் என்கிறார் .தான் புர்கா அணிந்து பழக்கப்பட்டவர் என்பதால் போலீஸ் சீருடை அணிய மனதளவில் தயாராகி கொண்டிருப்பதாக கூறுகிறார் .தான் போலீஸ் அதிகாரி ஆவதில் தன் பெற்றோருக்கும் ரெம்ப மகிழ்ச்சி என்கிறார் ஷாஜிதா .போலீஸ் அதிகாரியாகும் போது நீங்கள் அதிரடியில் இறங்க வேண்டி வருமே என்ற போது …உலக அளவில் தமிழக போலீஸ் பெருமை பெற்றது . அந்த பெருமை அதிரடியால் கிடைத்ததல்ல . புத்திசாலி தனத்தால் கிடைத்தது .நாம் எதை கொடுக்கிறமோ அதுவே திரும்ப கிடைக்கும், அனைத்து பிரச்சினைகளையும் ,எப்படி பட்ட கூட்டத்தையும் பேச்சுவார்த்தை மூலம் கட்டுபடுத்த முடியும், அதற்கான சாமர்த்தியம் என்னிடம் இருக்கிறது, லத்தியை விட வலுவானது வார்த்தை …என்று மிடுக்கோடு சொல்கிறார் ஷாஜிதா.நல்ல போலீஸ் அதிகாரியாக சாதிப்பார் என்ற நம்பிக்கை பிறக்கிறது .!!இவருக்கு உறுதுணையாக இருத்து பேருதவி புரிந்தவர்கள் .இவரது பெற்றோர் ஹூமாயூன் கபீர் -சாரா .சகோதரி ஷகினா .இவரது தாய் மாமாக்கள் அப்பாஸ் , அபுதாகிர் , அப்துல் ரகீம் .நன்றி : தினத்தந்தி .

குரூப் -1தேர்வில் வென்று டி.எஸ் .பி பணியை தேர்ந்தெடுத்திருக்கிறார் மதுரை சாஜிதா.

குரூப் -1தேர்வில் வென்று போலீஸ் துணை கண்காணிப்பாளர் (டி.எஸ் .பி ) பணியை தேர்ந்தெடுத்திருக்கிறார் மதுரை சாஜிதா .
22வயதான இவர் இன்ஜினியரிங் படித்தவராக இருந்தாலும் ,பல்வேறு துறைகளில் முத்திரை பதித்திருக்கிறார் . !
இவரது பள்ளி பருவத்தில் நிறைய பேச்சுப் போட்டி , கட்டுரைப் போட்டி ,வினாடி வினா போட்டிகளில் பரிசுகள் வாங்கி புகழ் பெற்று இருக்கிறார் .

பள்ளி பருவத்திலே நிறைய பரிசுகள் பெற்றதால் ‘கலை இலக்கிய நிர்வாகத் திறன் மாணவி ‘ என்ற விருதை இருமுறை பெற்று இருக்கிறார் .
இவர் 11வகுப்பு படிக்கும் போது சிக்கிம் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் கலந்து கொண்டு இளம் விஞ்ஞானி விருது பெற்றுள்ளார் .
‘மண்புழுவால் மண் வளம் பெருகுகிறதா ? அல்லது மண் வளத்தால் மண்புழு பெருகுகிறதா ? என்ற ஆய்வில் பல விதமான மண்களை சேகரித்து ,பல கட்ட ஆய்வுகள் நடத்தி ‘மண்புழு இருந்தால் தான் மண் வளம் பெரும் . மண் வளம் இருந்தால் தான் மண் புழுவும் அதில் நிறைந்திருக்கும் ‘ என்பதை நிரூபித்திருக்கிறார் .
+2ல் 1085 மதிப்பெண் எடுத்த இவர் விருதுநகர் காமராஜ் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியில் பி.ஈ. பயின்றார் . படிப்பை முடித்ததும் வேலைக்கு செல்லாமல் இவரது லட்சியமான அரசு உயர் அதிகாரி பணிக்காக படிக்க முயற்சி மேற்கொண்டார் . இவரது பெற்றோர் மேற்கொண்டு எம்.ஈ.படிக்க வலியுறுத்தியும் அதை மறுத்துள்ளார் . அவருக்கு கிடைத்த வங்கி வேலையையும் விரும்பவில்லை .
குருப் -4தேர்வு எழுதி வேலை கிடைத்தது அதற்கும் செல்லவில்லை . வி.இ.ஓ. தேர்வில் வென்றும் அந்த வேலைக்கும் செல்லவில்லை, குரூப் -2 தேர்வு எழுதி வென்றார் . இறுதியாக குரூப் -1 தேர்வு எழுதி வென்று டி.எஸ் .பி பணியை தேர்ந்தெடுத்துள்ளார், மேயர் சைதை துரைசாமியின் மனித நேயம் பயிற்சி மையத்தில் இலவச பயிற்சி தந்ததே தன் வெற்றிக்கு காரணம் என்கிறார் .
தான் புர்கா அணிந்து பழக்கப்பட்டவர் என்பதால் போலீஸ் சீருடை அணிய மனதளவில் தயாராகி கொண்டிருப்பதாக கூறுகிறார் .தான் போலீஸ் அதிகாரி ஆவதில் தன் பெற்றோருக்கும் ரெம்ப மகிழ்ச்சி என்கிறார் ஷாஜிதா .
போலீஸ் அதிகாரியாகும் போது நீங்கள் அதிரடியில் இறங்க வேண்டி வருமே என்ற போது …
உலக அளவில் தமிழக போலீஸ் பெருமை பெற்றது . அந்த பெருமை அதிரடியால் கிடைத்ததல்ல . புத்திசாலி தனத்தால் கிடைத்தது . நாம் எதை கொடுக்கிறமோ அதுவே திரும்ப கிடைக்கும், அனைத்து பிரச்சினைகளையும் ,எப்படி பட்ட கூட்டத்தையும் பேச்சுவார்த்தை மூலம் கட்டுபடுத்த முடியும், அதற்கான சாமர்த்தியம் என்னிடம் இருக்கிறது, லத்தியை விட வலுவானது வார்த்தை …என்று மிடுக்கோடு சொல்கிறார் ஷாஜிதா. நல்ல போலீஸ் அதிகாரியாக சாதிப்பார் என்ற நம்பிக்கை பிறக்கிறது .!!

இவருக்கு உறுதுணையாக இருத்து பேருதவி புரிந்தவர்கள் .
இவரது பெற்றோர் ஹூமாயூன் கபீர் -சாரா .
சகோதரி ஷகினா .
இவரது தாய் மாமாக்கள் அப்பாஸ் , அபுதாகிர் , அப்துல் ரகீம் .
நன்றி : தினத்தந்தி .

Leave a comment

Your email address will not be published.


*