பெண்களில் சொர்க்கவாதிகள் !!

பெண்களில் சொர்க்கவாதிகள் !!

பெண்களில் சொர்க்கவாதிகளை நான்
உங்களுக்கு அறிவிக்கட்டுமா?
என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதரே! அறிவியுங்கள்!
என்று -நபித்தோழர்கள்- கூறினார்கள்.

அதிகமாக நேசிக்கக் கூடியவள்

அதிகமாக
குழந்தையைப் பெறக் கூடியவள்

அவள்
கோபப்பட்டாலோ, பிறர்
அவளுக்கு தீங்கிழைத்து விட்டாலோ,
கணவன் அவள்
மீது கோபப்பட்டாலோ என்னுடைய
கையை உன் கைமீது வைத்துவிட்டேன்! நீ
என்னை பொருந்திக் கொள்ளும்
வரை இமைகளுக்கு சுர்மா கூட
இடமாட்டேன் என்று கூறுபவள்
என்றார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் -ரலி, நூல் : தபரானீ

ஹுஸைன் இப்னு மிஹ்ஸன் (ரலி)
அவர்களின் மாமி ஒரு தேவைக்காக
நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களின்
தேவை முடிந்து புறப்பட்ட
போது நபி (ஸல்) அவர்கள், நீ கணவனுடன்
வாழும் பெண்தானே? என்று கேட்டார்கள்.
அதற்கவர், ஆம்! என்றார். நீ அவருடன்
எப்படி நடந்து கொள்கின்றாய்?
என்று கேட்டார்கள். அதற்கவர், என்னால்
முடியாததைத் தவிர வேறு எதிலும் நான்
அவருக்கு குறை வைக்கவில்லை என்றார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், அவருடைய
விஷயத்தில் நீ மிகக் கவனமாக
நடந்து கொள்! ஏனெனில் நிச்சயமாக
அவர்தான் உன்னுடைய சொர்க்கமும்
நரகமும் ஆவர் என்றார்கள்.
(அறிவிப்பவர் : ஹுஸைன் இப்னு மிஹ்ஸன் –
ரலி, நூல் : அஹ்மத் 18233)

Leave a comment

Your email address will not be published.


*