ஜனாஸாத் தொழுகை தொழும் முறை

ஜனாஸாத் தொழுகை தொழும் முறை

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
ஜனாஸாத் தொழுகை தொழும் முறை
ஜனாஸா தொழுகைக்கு நான்கு தக்பீர்கள் கூற வேண்டும். முதல் தக்பீர் கூறிய பிறகு ஸூரத்துல் ஃபாத்திஹா ஓத வேண்டும்.

இரண்டாவது தக்பீரில் நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூற வேண்டும்.

மூன்றாவது நான்காவது தக்பீரில் மய்யித்திற்காக துஆ செய்ய வேண்டும். பிறகு இரண்டு புறமும் சலாம் கூற வேண்டும்.
ஜனாஸாத் தொழுகையில் இமாம் தக்பீர் கூறிய பிறகு, அல்ஹம்து ஓதுவதும், பிறகு மற்ற தக்பீர்களில் ஸலவாத் கூறி இறந்தவருக்காக துஆ செய்வதும் இந்த தக்பீர்களில் குர்ஆன் வசனங்கள் எதையும் ஓதாமலிருப்பதும் நபிவழியாகும் என்று நபித்தோழர் ஒருவர் அறிவிக்கிறார்(அபூஉமாமா இப்னு ஸஹ்ல்(ரலி) (நஸயீ)
நீங்கள் மய்யித்திற்காகத் தொழுதால் தூய்மையான மனதுடன் அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று நபியவர்கள் கூறினார்கள்(அபூஹூரைரா(ரலி)(அபூதாவூத்)
மூன்றாவது நான்காவது தக்பீருக்குப்பின் மய்யித்திற்காக வேண்டி தூய மனதுடன் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
ُاللهم اغفر له و ارحمه و عافه و اعف عنه و اكرم نزله و وسع مدخله و اغسله بللماء و الثلج و البرد و نقه من الخطايا كما نقيت الثوب الابيض من الدنس وابدله دارا خيرا من داره واهلا خيرا من اهله و زوجا خيرا من زوجه وادخله الجنة واعدذه من عذاب القبر و من عذب النار

பொருள்:
இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள் புரிவாயாக! இவருக்கு சுகம் அளிப்பாயாக! இவரது தங்குமிடத்தை மதிப்புமிக்கதாக ஆக்குவாயாக! மேலும் விசாலமானதாக இவரது நுழைவிடத்தை ஆக்குவாயாக! வெண்மையான ஆடை அழுக்குகளிலிருந்து தூய்மைப்படுத்தப்படுவதுபோல் இவரை இவரது தவறுகளிலிருந்து தண்ணீராலும் ஆலங்கட்டி நீராலும் பனிக்கட்டியாலும் தூய்மைப்படுத்துவாயாக! இவது இல்லத்தைவிட சிறந்த இல்லத்தை (மறுமையில்) அளிப்பாயாக! இவரது குடும்பத்தினரைவிட சிறந்த குடும்பத்தை இவருக்கு அளிப்பாயாக! இவரது துணையைவிட சிறந்த துணையை இவருக்கு ஏற்படுத்துவாயாக! இவரைச் சுவனத்தில் நுழையச்செய்து கப்ருடைய வேதனை, நரக வேதனை ஆகியவற்றிலிருந்து காப்பாயாக! (முஸ்லிம், நஸயீ)
اللهُـمِّ اغْفِـرْ لِحَيِّـنا وَمَيِّتِـنا وَشـاهِدِنا ، وَغائِبِـنا ، وَصَغيـرِنا وَكَبيـرِنا ، وَذَكَـرِنا وَأُنْثـانا . اللهُـمِّ مَنْ أَحْيَيْـتَهُ مِنّا فَأَحْيِـهِ عَلى الإِسْلام ،وَمَنْ تَوَفَّـيْتَهُ مِنّا فَتَوَفَّـهُ عَلى الإِيـمان ،
பொருள்:
எங்களில் உயிருடனிருப்பவர்களுக்கும், இறந்து விட்டவர்களுக்கும், இங்கு வந்திருப்போருக்கும், வராதோருக்கும், சிறியவருக்கும், பெரியவருக்கும், ஆணுக்கும், பெண்ணுக்கும் இறiவா! நீ மன்னிப்பாயாக! எங்களில் எவரை நீ வாழச் செய்கிறாயோ அவரை இஸ்லாமிய அடிப்படையில் வாழச் செய்வாயாக! எங்களில் எவரை நீ மரணிக்கச் செய்துவிட்டாயோ அவரை ஈமானுடன் மரணிக்கச் செய்வாயாக! (நஸயீ, அஹ்மது)
இந்த துஆக்களை ஓதியபிறகு இருபுறமும் சலாம் கூறி முடித்துவிட வேண்டும்.

 

ஆக்கம் : பேராசிரியர் கே. தாஜூதீன் எம்‌ஏ அவர்கள்

Leave a comment

Your email address will not be published.


*