சமூகத்தின் விஷம் போன்ற தீய பழக்கங்கள் பற்றிய நபிமொழிகள்

சமூகத்தின் விஷம் போன்ற தீய பழக்கங்கள் பற்றிய நபிமொழிகள்
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

சமூகத்தின் விஷம் போன்ற தீய பழக்கங்கள் பற்றிய நபிமொழிகள்

நபி (ஸல்) கூறினார்கள்:
அறிஞர்கள் முன் காண்பிப்பதற்காகவோ அல்லது அறியாதவர்களிடம் வாதம் புரிவதற்காகவோ அல்லது அவையோர்களில் சிறந்தவராகத் திகழ்வதற்;காகவோ கல்வியைக் கற்காதீர்கள். யார் இவ்வாறு செய்வாரோ அவருக்கு நரகமே! நரகமே!.           அறிவிப்பாளர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) நூல்: இப்னு மாஜா
இதுபோன்ற கருத்துள்ள மற்றொரு நபிமொழி:
யார் அல்லாஹ்வின் திருப்திக்காக அன்றி உலக நலன்களுக்காக கல்வி கற்பாரோ அவர் மறுமை நாளில் சுவனத்தின் நறுமணத்தைக்கூட நுகரமாட்டார். அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி) நூல்: இப்னு மாஜா
நம்முடைய சமுதாயத்து அறிஞர்கள் இந்நபிமொழியின் எச்சரிக்கையை நன்கு அறிந்துள்ளார்கள் என நம்புவோம்.

Leave a comment

Your email address will not be published.


*