வைட்டமின் A மற்றும் D

வைட்டமின் A மற்றும் D
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் டி

images (4)
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மட்டுமின்றி, அன்பான வாழ்க்கைக்கும் வைட்டமின்கள் அவசியம். அதிலும் குறிப்பாக கணவன் – மனைவிக்கிடையிலான அன்யோன்யத்துக்கு வைட்டமின் ஏ (A) மற்றும் டி (D) இரண்டில் ஒன்று குறைந்தாலும் பிரச்சனைதான்.
வைட்டமின் ஏ என்றால்:
Appreciation: சின்னச் சின்ன விசயங்களைக் கூட பரஸ்பரம் பாராட்டிக் கொள்ளத் தவறாதீர்கள்.
Affection: ஐந்தறிவு படைத்த மிருகம் கூட அன்புக்கு ஏங்கும். கிடைக்கிற தருணங்களில் எல்லாம் காரணங்களைத் தேடாமல் உங்கள் அன்பை வெளிப்படுத்தத் தயங்காதீர்கள்.

Affirmation: வாழ்க்கைத் துணை சொல்கிற, செய்கிற விசயங்களை அவரது பார்வையில் இருந்து ஏற்றுக் கொள்ளுங்கள்.

Attraction: காதலிக்கிறபோது, பார்த்துப் பார்த்து உடையணிந்து, உங்களை அழகாகக் காட்டிக் கொள்வதில் இருந்த முனைப்பு, கல்யாணத்துக்குப் பிறகு காணாமல் போக வேண்டாம். அழுக்கு லுங்கியுடனோ, அழுக்கு நைட்டியுடனோ இருப்பதை இயல்பானதாக்க வேண்டாம். திருமணத்திற்குப் பிறகும், துணையின் கவனம் உங்கள் பக்கம் வேண்டியதன் அவசியம் உணர்ந்து நடந்து கொள்ளுங்கள்.

Attention: துணை என்ன சொன்னாலும் அதில் உங்களுக்கு உடன்பாடு இருக்கிறதோ, இல்லையோ காது கொடுத்துக் கேட்கப் பழகுங்கள்.
வைட்டமின் டி என்றால்:
Time: நேரம் என்கிற விசயம் தம்பதிக்கிடையில் மிகப் பெரியளவில் தன் விளையாட்டுகளைக் காட்டும். இருவரும் ஒருவருக்கொருவர் போதுமான நேரம் ஒதுக்காத காரணத்தினால்தான், பல ஜோடிகளுக்குள்ளும் பிளவு என்பது பெரிதாகிறது. எத்தனை அதிக நேரத்தை உங்களவருக்காக ஒதுக்குகிறீர்களோ, அத்தனையும் அப்படியே அன்பாக உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும்.

Touch:  ஸ்பரிசத்துக்கு அன்பை வளர்க்கும் மாபெரும் சக்தி உண்டு. அந்த ஸ்பரிசம் செக்ஸ் ரீதியானதாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. சின்னச் சின்ன அணைப்புகளும், தலைகோதலும், கைகோர்ப்பும்கூட உங்கள் அன்பை துணைக்கு உணர்த்தும்.

Talk:  காதலித்த காலத்தில் மணிக்கணக்கில் பேசி இருப்பீர்கள். போன் சூடாகி பேட்டரியை மாற்றிப் போட்டும் பேசித் தீர்த்தீருப்பீர்கள். திருமணமான புதிதிலும் நேரம் போவது தெரியாமல் பேசியிருப்பீர்கள். ஆனால், பிறகு தேவையான விஷயங்களுக்குக்கூட பேசப்பிடிக்காமல் விலகியிருப்பீர்கள். காதலை உயிர்ப்புடன் வைத்திருக்க இருவருக்கும் இடையிலான அளவுக்கு அதிகமான பேச்சும் அவசியம்.

Leave a comment

Your email address will not be published.


*