மோடியின் நிலமோசடி

மோடியின் நிலமோசடி

மோடியின் நிலமோசடி :

modi frodசதுரடி 140 ரூபாய்க்கு விற்க வேண்டிய நிலத்தை ’20 பைசா’வுக்கு விற்று சாதனை ! தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அம்பலம் !! அரசுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு !!! குஜராத் மாநிலம் ‘கட்ச்’ மாவட்டத்தின் ‘முந்த்ரா’ என்ற பகுதியில் அரசுக்கு சொந்தமான ‘5465 ஹெக்டர்’ நிலத்தை அடிமாட்டு விலைக்கு தனியாருக்கு விற்றுள்ளார், நரேந்திர மோடி. 2005-2007 காலகட்டத்தில் 30 உத்தரவுகள் மூலம் இந்த முறைகேட்டை செய்துள்ளார், மோடி. 15.07.2005 ந்தேதி மட்டும், ஒரே நாளில் 23 உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு இந்த நிலமோசடி செய்யப்பட்டுள்ளது. சதுர மீட்டர் ரூ.1500 என்று, அரசால் நிர்ணயிக்கப்பட்ட அன்றைய வழிகாட்டு மதிப்பீட்டை விட மிகவும் குறைத்து, சதுர மீட்டர் 2 ரூபாய் 50 காசுக்கு தனியாருக்கு தாரை வார்த்துள்ளார், மோடி. சந்தை மதிப்பைவிட பல மடங்கு குறைத்து விற்பனை செய்யப்பட்டதால், முத்திரைத்தாள் குறைப்பு மோசடியும் நடந்தேறியுள்ளது. அரசு நிலங்களை விற்பது குறித்த எல்லா நடைமுறைகளையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு ஒரே நாளில் விற்கப்பட்ட நிலத்தின் மூலம் மட்டும், அரசுக்கு 143 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. மேற்கண்ட தகவலை ‘அன்ஹத்’ (Act Now for Harmony and Democracy “ANHAD”) என்ற தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a comment

Your email address will not be published.


*