இந்தியாவின் முதல் சாதனை பெண்கள்

இந்தியாவின் முதல் சாதனை பெண்கள்
பெண்கள் இடம் பெறாத துறையே இல்லை என்று சொல்லும் அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளோம். ஆனால், ஒவ்வொரு துறையிலும், ஒரு பெண் முதல் முறையாக நுழையும் போது, அதில் உள்ள பல்வேறு பாதகங்களையும் அனுபவித்து, அவருக்குப் பின் வரும் பெண்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.
அதுபோன்று பல்வேறு துறைகளில் முதல் முறையாக காலடி எடுத்து வைத்த பெண்களின் பட்டியலை இங்கு காணலாம்

இந்தியாவின் முதல் பெண் பிரதமர்: இந்திரா காந்தி

இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர்: சுசேதா கிருபளானி (உத்திரபிரதேசம்)

இந்தியாவின் முதல் பெண் ஆளுநர்: சரோஜினி நாயுடு (உத்திரபிரதேசம்)

இந்தியாவின் முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதி: பாத்திமா பீவி

இந்தியாவின் முதல் பெண் வெளிநாட்டு தூதர்: விஜயலட்சுமி பண்டிட்

இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி: கிரண்பேடி

இந்தியாவின் முதல் பெண் விண்வெளிப் பெண்மனி: கல்பனா சாவ்லா

மிஸ்யூனிவேர்ஸ் பட்ட பெற்ற முதல் பெண்மணி: சுஸ்மிதா சென்

மக்களவை முதல் பெண் சபாநாயகர்: மீரா குமார்

முதல் பெண் குடியரசுத் தலைவர்: பிரதீபா பாட்டில்

Leave a comment

Your email address will not be published.


*