ஆஷுரா நோன்பு!

ஆஷுரா நோன்பு!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்…
முஹர்ரம் மாதத்தின் 9 மற்றும் 10ஆம் நாட்களான புதன் மற்றும் வியாழன் (13&14 நவம்பர் 2013) ஆகிய தினங்களில் ஆஷுரா நோன்பு நோற்குமாறு IGC தங்களுக்கு நினைவூட்டுவதில் மகிழ்ச்சியுறுகின்றது.
ஆஷுரா நோன்பு அதற்கு முந்திய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என நான் கருதுகிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)ரமழானுக்குப் பின் சிறப்பான நோன்பு முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும், கடமையான தொழுகைக்குப் பின் சிறந்த தொழுகை இரவுத் தொழுகையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

ஆஷுரா தினத்தன்று நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்று அதை நோற்கும்படி ஏவிய போது இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளல்லவா அல்லாஹ்வின் தூதரே! என நபித்தோழர்கள் கேட்டார்கள், அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் நாடினால், எதிர் வரும் வருடம் ஒன்பதாவது நாளையும் (சேர்த்து) நோற்பேன் என்றார்கள். அடுத்த வருடம் வருவதற்கு முன்பே நபி (ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள். (முஸ்லிம்)

முஹர்ரம் மற்றும் ஆஷுரா குறித்த மேலும் விபரங்கள் கீழ்கண்ட சுட்டிகளில் உள்ளன.

http://www.islamkalvi.com/portal/?p=5951

http://www.islamkalvi.com/portal/?p=1185

Leave a comment

Your email address will not be published.


*