ரெப்போ வங்கி கடன் வட்டி 0.25 சதவீதம் உயர்வு: வீடு, வாகனக் கடன் வட்டி உயரும்

ரெப்போ வங்கி கடன் வட்டி 0.25 சதவீதம் உயர்வு: வீடு, வாகனக் கடன் வட்டி உயரும்

மும்பை: வங்கிகளின் குறுகிய காலக் கடன்வட்டியை 0.25 சதவீதம் ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. மும்பையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தலைமையில் இன்று நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்: எம்.எஸ்.எப் என்கிற தினசரி அடிப்படையிலான கடன் வட்டி 9 சதவீதத்தில் இருந்து 8.75 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

ரெப்போ எனப்படும் வங்கிக் கடன் வட்டி 7.5 சதவீதத்தில் இருந்து 7.75 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சி.ஆர்.ஆர் எனப்படும் வங்கிகள் பராமரிக்க வேண்டிய ரொக்க கையிருப்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

ஆனால், ரிசர்வ வங்கியிடம் வங்கிகள் பராமரிக்க வேண்டிய சி.ஆர்.ஆர் 4 சதவீதமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. வங்கிகளின் கடன்வட்டி உயர்வால் வீடு, வாகன கடனுக்கான வட்டி அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Leave a comment

Your email address will not be published.


*