தீபா­வளி இனிப்பு விற்­பனையில் மந்தம்

தீபா­வளி இனிப்பு விற்­பனையில் மந்தம்

மேட்டூர்: மேட்­டூரில், தீபா­வளி இனிப்பு விற்­பனை மந்­த­மாக உள்­ள­தாக, விற்­ப­னை­யா­ளர்கள் தெரி­வித்­தனர்.தீபா­வளி பண்­டி­கையை முன்­னிட்டு, சேலம் மாவட்டம், மேட்­டூரில் ஏரா­ள­மான திரு­மண மண்­ட­பங்­களை வாட­கைக்கு எடுத்து, வியா­பா­ரிகள், இனிப்பு மற்றும் கார வகைகள் தயா­ரிப்பில் மும்­மு­ர­மாக ஈடு­பட்­டு உள்­ளனர்.
இது­கு­றித்து, மேட்­டூரில், தீபா­வளி இனிப்­பு­களை தயா­ரிக்கும், ராஜூ கூறி­ய­தா­வது:கடந்த ஆண்டு, 1,090 ரூபா­யாக இருந்த ஒரு டின், சுத்­தி­க­ரிக்­கப்­பட்ட சமையல் எண்ணெய் விலை, 1,320 ரூபா­யா­கவும், 28 ரூபா­யாக இருந்த 1 கிலோ சர்க்­கரை, 33 ரூபா­யா­கவும், 58 ரூபா­யாக இருந்த தர­மான மாவு விலை, 78 ரூபா­யா­கவும் அதி­க­ரித்­துள்­ளது. இதனால், நடப்­பாண்டு இனிப்பு விலையை கிலோ­வுக்கு குறைந்­த­பட்சம், 30 ரூபாய் உயர்த்­தி­யுள்ளோம்.மொத்தம், 20 வகை இனிப்­பு­களைக் கொண்ட பெட்­டியை, 250 ரூபாய்க்கு விற்­கிறோம்.
ஐந்­தாண்­டு­க­ளுக்கு முன், எங்கள் வாடிக்­கை­யா­ளர்கள் குறைந்­த­பட்சம், ஐந்து கிலோ இனிப்­பு­களை வாங்­குவர். சமீ­ப­கா­ல­மாக குறைந்த வய­தி­லேயே ஏரா­ள­மானோர் நீரி­ழிவுநோய் பாதிப்­புக்கு உள்­ளா­கின்­றனர். இதனால், வாடிக்­கை­யா­ளர்கள் அதி­க­பட்சம், 2 கிலோ ஸ்வீட்­டுக்கு மேல் வாங்­கு­வ­தில்லை. ஆரோக்­கியம் கருதி, எண்ணெய் பண்­டங்­களை மக்கள் குறை­வாக சாப்­பி­டு­வதால் கார வகைகள் விற்­ப­னையும் சரிந்­துள்­ளது.கடந்த ஆண்டை விட, நடப்­பாண்டு விலை உயர்வு மற்றும் நீரி­ழிவு நோயா­ளி­களின் எண்­ணிக்கை அதி­க­ரிப்பால், இனிப்பு விற்­பனை, 30 சத­வீதம் குறைந்­துள்­ளது.இவ்­வாறு, அவர் கூறினார்.
Click Here

Leave a comment

Your email address will not be published.


*