மானுடம் வென்றதம்மா ! நெஞ்சை நெகிழவைக்கும் செய்தி!

மானுடம் வென்றதம்மா ! நெஞ்சை நெகிழவைக்கும் செய்தி!

பிப்ருவரி 25 ம் தேதி இரண்டு கிட்னிகளும் பாதிக்கப்பட்ட ராசாத் முஹம்மது டயாலிசிஸ் செய்து கொள்வதற்காக கேரளாவில் ஆலுவாவில் இருந்து கொசிக்குச் செல்கிறார்.

பேருந்துபயனத்தில் சக பயணியான பாதர் கிடாங்கதழே செபஸ்டியன் ரசாதோடு பேசுகிறார். பரஸ்பர விசாரணையில் ரசாதின் நிலைமையைப் புரிந்து கொண்ட பாதர் நான் உங்களுக்கு கிட்னி தந்தால் ஏற்றுக் கொள்வீர்களா? என்று கேட்டிருக்கிறார். பயணம் முடிகிறது. ராசாத் அதை மறந்து விட்ட நிலையில் மறுநாள் பாதர் ரசாதுக்கு போன் செய்து தனது கிட்னி நல்ல நிலையில் இருப்பதாகவும் அதில் ஒன்றை அவருக்குத் தர தான் தயாராக இருப்பதாகவும் சொல்ல மகிழ்ச்சியில் பதில் சொல்ல முடியாமல் திக்கு முக்காடிப் போனார் ராசாத்!

“அவர் மிகவும் பலவீனமாகவும், மனக்கஷ்டதிலும் இருந்தார். அவரது வலியை உணர்ந்து நான் எனது கிட்னிகளில் ஒன்றை அவருக்கு தானம் செய்ய முன்வந்துள்ளேன்! எனது ரத்த வகை அவரோடு ஒத்துப் போகறது! இன்னும் சில வாரங்களில் எனது கிட்னி சகோ. ரசாதுக்கு பொருத்தப் பட வுள்ளது” என்கிறார் பாதர் மகிழ்ச்சி பொங்க.

ஆம், அதற்கான முதல் கட்ட பரிசோதனை முடிவடைந்து விட்ட நிலையில் கேரள முஸ்லிம் அமைப்புகள் கிட்னி மாற்று சிகிச்சைக்கான பணஉதவியைச் செய்ய முன் வந்துள்ளன!

– தகவல் – சேயன் ஹமீது

Leave a comment

Your email address will not be published.


*