மக்கா கிரேன் விபத்து விசாரணையில் புதிய தகவல்!

மக்கா கிரேன் விபத்து விசாரணையில் புதிய தகவல்!

மக்கா(30 டிச 2016): மக்காவில் கிரேன் விபத்து விசாரணையில் விபத்துக்கு காரணமான கிரேன் உரிமம் இல்லாமல் உபயோகிக்கப் பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

முஸ்லிம்களின் புனித நகரமான மக்காவில் கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கட்டுமானப் பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த ராட்சத கிரேன் ஒன்று எதிர்பாராதவிதமாக சரிந்து மசூதியின் கூரையை உடைத்துக் கொண்டு அங்கிருந்தவர்கள் மீது விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி110 பேர் பலியானார்கள் 260 பேர் படுகாயமடைந்ததனர்.

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய  இந்த சம்பவம் குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இச்சம்பவத்தில் குற்றவாளிகள் பட்டியலில் உள்ள ஒருவர் விபத்து ஏற்படுத்திய க்ரேன் உரிமம் இல்லாமல் உபயோகிக்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவலை விசாரணையின்போது தெரிவித்துள்ளார். தொடர்ந்து பல பிரிவுகளாக விசாரணை நடைபெற்று வருகிறது.

 

நன்றி: இந்நேரம்.காம்

Leave a comment

Your email address will not be published.


*