எங்கள் சுதந்திரம்..

எங்கள் சுதந்திரம்..

எங்கள் சுதந்திரம்..

வன்முறை…
மதங்களின் பெயரால்
மதமாற்றத்தின் பெயரால்
மத சுதந்திரத்தின் பெயரால்
மதசாற்பற்ற நாட்டின் பெயரால்

கல்விகூடங்களின் பெயரால்
கல்வி கற்பிக்கும் பெயரால்
கட்டாயபாடத்தின் பெயரால்
கல்வித்துறையின் பெயரால்

அரசியல் அதிகாரத்தை
பயன்படுத்தி
அரசியல்வாதிகளின்
அர்தமற்ற மதரீதியான உளறிலினால்

இஸ்லாமியர்கள்
கிறிஸ்தவர்கள்
சீக்கியவர்களின்
தலித்களின் பெயரால்…

காவல்துறை
கட்டுபாடற்று கிடக்கும்போது
கட்டவிழ்க்கப்படும்போது
கட்டாயமாக நடத்தப்படும் வன்முறைகள்.

அரசியல், மதம், சாதி,
குடும்பம், பாலியலில் வன்முறைகள்..

குற்றங்கள்
உலகங்கள் உற்றுநோக்கும்போதும்
தொடர்ந்தும், தொடர்ந்தாலும்
சுதந்திரம் இன்னும்
விலைபோகவில்லை

வன்முறைகளை கண்டு
சுதந்திரத்திற்க்கு அச்சமில்லை

உண்மையாக உருவாக்கும்படியாக
கிடைத்த சுதந்திரம்..

தேகத்தை இழந்து
தியாகத்தினால் கிடைத்த சுதந்திரம்..

சரியோ.. பிழையோ..
வன்முறையை
விட்டொழிப்போம்
ஒன்றுபடுவோம்
கிடைத்த சுதந்திரத்தை
காத்திடுவோம்..

– பூந்தை ஹாஜா

Leave a comment

Your email address will not be published.


*