பரேலில் விடுதலை.. – பூந்தை ஹாஜா

பரேலில் விடுதலை.. – பூந்தை ஹாஜா

பரேலில் விடுதலை..

பூந்தை ஹாஜா

அயல்நாட்டில் அகதிகளாய்..
அவ்வப்போது பரேலில்
பயணம் நாட்டுக்கு..

சிறையில் இருந்து
விடுதலையான சந்தோஷம்.
அதற்கு அத்தாட்சி
கொண்டு செல்லும் வெகுமதிகள்.

அம்மா சொன்னால்
கடவுச்சீட்டை பத்திரமாக எடுத்துவை என்று..
இரவில் மனைவி சொன்னால்
கடவுச்சீட்டை தூர வீசுங்கள்
வருவதை பார்த்துக்கொள்ளலாம் என்று..

அன்பாக அரவணைத்தது குடும்பம்
அடுத்த பயணம் வரும்போதாவது
நான் கேட்டதை கொண்டுவா
என்றது ஒரு குரல்..

இன்னும் கொஞ்ச காலம்
நீ அங்கு இருந்தால்
நம் குடும்ப கஷ்டம் கரையேறும்
என்றது பாசக்குரல்..

ஓடியாடி வாங்கி வந்த
ஒட்டுமொத்த பரேல் தினங்களும்
தீர்ந்துவிட்ட நிலையில்
சிறைவாசம் மீண்டும் அழைத்து
கடவுச்சீட்டு வழியாக..

அம்மா சொன்னால்
கடவுச்சீட்டை பத்திரமாக எடுத்துவைத்துக்கொள்.

குடும்பத்தை புரிந்கொண்டு மனைவி
அதை நேற்றே எடுத்து வைத்துவிட்டேன் என்றால்.

அழுதுக்கொண்டும் சிரித்துக்கொண்டும்
புறப்பட்டோம் அந்த
சிறைவாசத்தை நோக்கி.. – பூந்தை ஹாஜா

Leave a comment

Your email address will not be published.


*