இந்துத்துவா மிரட்டலுக்கு பயந்த கர்நாடகம் – முஸ்லிம் அறிஞருக்கு தடை!

இந்துத்துவா மிரட்டலுக்கு பயந்த கர்நாடகம் – முஸ்லிம் அறிஞருக்கு தடை!

கர்நாடகா (30 டிசம்பர் 2015) : கர்நாடகாவில் பிரபல இஸ்லாமிய அறிஞரின் வருகைக்கு இந்துத்துவா அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து மிரட்டல் விட்டதால் பணிந்த அம்மாநில காவல்துறை அவரது வருகைக்கு தடை விதித்துள்ளது.

மும்பையைச் சார்ந்தவர் ஜாஹிர் நாயக். பிரபல இஸ்லாமிய அறிஞரான இவர் பல்வேறு நாடுகளிலும், இந்தியாவின் பல நகரங்களிலும் உரை நிகழ்த்தியுள்ளார். பல்வேறு மத வேதங்களையும் கற்றறிந்துள்ள இவரின் உரையை அனைத்து மதத்தவரும் விரும்பி கேட்டு வருகின்றனர்.

இவர் வருகின்ற ஜனவரி 3-ஆம் தேதி அன்று மங்களூருவில் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இவரது வருகைக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட சில இந்துத்துவா அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். “ஜாஹிர் நாயக் வந்தால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பிரவிண் தொகாடியாவை அதே நாளில் அழைத்து பேச சொல்வோம் என்றும், இதன் காரணமாக மதக் கலவரம் ஏற்பட்டால் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்” எனவும் அரசுக்கு மிரட்டல் விடுத்தனர்.

இதனையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக காவல்துறை ஆணையர் முருகன், “ஜாஹிர் நாயக் மங்களூரு வருவதற்கு தடை விதித்துள்ளார். மேலும் இந்தத் தடை டிசம்பர் 31 முதல் ஜனவரி  6 வரை நிலுவையில் இருக்கும்”  என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி: இந்நேரம்.காம்

Leave a comment

Your email address will not be published.


*