பயங்கர வாதத்தை அழிக்க இஸ்லாமிய ராணுவ கூட்டமைப்பு!

பயங்கர வாதத்தை அழிக்க இஸ்லாமிய ராணுவ கூட்டமைப்பு!
ரியாத் (15 டிச 15):பயங்கர வாதத்தை அழிக்க சவுதி அரேபியா தலைமையில் இஸ்லாமிக் ராணுவ கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் உள்படை 34 நாடுகள் கூட்டமைப்பில் பங்கு கொண்டுள்ளது. ரியாதை தலைமையாக கொண்டு தாக்குதல் நடத்த இந்நாடுகள் முடிவு செய்துள்ளன. தீவிரவாதத்திற்கு எதிராக இந்நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படுமென்று சவுதி அரேபியா பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
உலகில் ஊழல் மற்றும் அழிவை இஸ்லாம் தடுக்கிறது.மனித கண்ணியம் மற்றும் பாதுகாப்பு உரிமையை தீவிரவாதம் தொடர்ந்து மீறுகிறது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய கூட்டமைப்பில் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்கா தலைமையிலான படை, சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது.
சவுதி பாதுகாப்பு அமைச்சர் முகமது பின் சல்மான் புதிய கூட்டமைப்பு தீவிரவாத குழுக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தும்.
மேலும், மற்ற நாடுகளுடன் இணைந்து பணியாற்ற தொழில்நூட்பத்தை வலுபடுத்தும் மற்றும் சர்வதேச அளவில் தீவிரவாதத்தை ஒழிக்க ,சர்வதேச சமூகத்திற்கு ஆதரவு அளிக்கும். ஒவ்வொரு இஸ்லாமிய நாடுகளும் தீவிரவாத்திற்கு எதிராக போரிடுகிறது ஆனால் கூட்டணி என்பது மிகவும் முக்கியமானது என்று அவர் கூறியுள்ளார்.
நன்றி: இந்நேரம்.காம்

Leave a comment

Your email address will not be published.


*