கோவிலுக்கு செல்லவிடாமல் ஆர்.எஸ்.எஸ்.தடுத்தனர்:ராகுல் காந்தி பகீர் புகார்!

கோவிலுக்கு செல்லவிடாமல் ஆர்.எஸ்.எஸ்.தடுத்தனர்:ராகுல் காந்தி பகீர் புகார்!

புதுடெல்லி(14 டிச.2015): அஸாமில் கோவிலுக்குல் செல்லவிடாமல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தடுத்ததாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நாடாளுமன்றத்தின் வெளியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “”அஸாம் மாநிலத்திற்கு சென்றபோது பர்பெட்டா மாவட்டத்தில் உள்ள கோவிலுக்குச் சென்றேன். அப்போது கோவிலில் இருந்த ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் என்னை உள்ளே நுழைய விடவில்லை. என்னை தடுத்து நிறுத்த அவர்கள் யார்? இதுதான் பா.ஜ.க.வின் அரசியல் தீண்டாமை” என்று கூறினார்.

மேலும், உம்மன் சாண்டி விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த ராகுல்காந்தி, “மாநில முதல்-மந்திரியாக உள்ள உம்மன் சாண்டிக்கு அழைப்பு விடுக்காதது கேரள மக்களை அவமதிக்கும் செயல். இது ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம்” என்றார்.

முன்னதாக, பாஞ்சாப் மாநிலத்தில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற வன்முறை சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்திற்கு வெளியே காங்கிரஸ் உறுப்பினர்களின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a comment

Your email address will not be published.


*