மோடி மீது நான் வைத்திருந்த கனவுகளை சிதைத்துவிட்டார்: ராம்ஜெத்மலானி!

மோடி மீது நான் வைத்திருந்த கனவுகளை சிதைத்துவிட்டார்: ராம்ஜெத்மலானி!

புதுடெல்லி: பிரதமர் மோடி அவர் மீது நான் வைத்திருந்த கனவுகளை சிதைத்துவிட்டார் என மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி தெரிவித்துள்ளார்.

ராணுவத்தில் இருந்து கடந்த 2006ம் ஆண்டுக்கு முன்னர் ஓய்வு பெற்றவர்களை விட, அதற்குப்பின் ஓய்வு பெற்ற வீரர்களுக்கு அதிக ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இந்த முரண்பாட்டை களைவதற்காக

முன்னாள் ராணுவ வீரர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ‘ஒரு பதவி, ஒரு ஓய்வூதியம்’ என்ற திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் இத்திட்டம், இன்னும் அமல்படுத்தப்படவில்லை.

இந்த திட்டத்தை விரைவில் அமல்படுத்துமாறு கோரிக்கை விடுத்து முன்னாள் ராணுவ வீரர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள ராம்ஜெத்மலானி, போராட்டத்தில் ராம் ஜெத்மலானி மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், “எந்தஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல், தேசமக்கள் என் மீது காட்டிய அன்பை திருப்பி செலுத்துவதைவிட எனக்கு எந்த நோக்கமும் கிடையாது. அதற்காகவே இங்கு வந்தேன். பிரதமர் மோடி, அவர் மீது நான் வைத்திருந்த கனவுகளை சிதைத்துவிட்டார் என்று கூற மிகவும் வெட்கப்படுகிறேன். மொத்த தேசத்தின் எதிர்பார்ப்பையும் கீழே சாய்த்துவிட்டார். நான் அரசியல்வாதி என்று கூறிக்கொள்ளவும் வெட்கப்படுகிறேன். ஆனால் நண்பர்கள் மற்றும் மக்கள்களை மறந்த அரசியல்வாதி நான் கிடையாது என்றார்.

நன்றி: இந்நேரம்.காம்

Leave a comment

Your email address will not be published.


*