ஃபேஸ்புக்கில் ஆபாச தகவல்களை வெளியிட்ட இளைஞர் கைது!

ஃபேஸ்புக்கில் ஆபாச தகவல்களை வெளியிட்ட இளைஞர் கைது!

சென்னை: ஃபேஸ்புக்கில் சிறுமிகள் பற்றிய ஆபாச தகவல்களை வெளியிட்ட மணிகண்ட பிரபு என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஃபேஸ்புக்கில் ஆபாச தகவல்கள் வெளியிடப்படுவதாக குழந்தைகள் நலம் தொடர்பான தொண்டு நிறுவனத்தினர் கொடுத்த புகார் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. காவல்துறை இன்ஸ்பெக்டர்கள் மாணிக்கவேல், அண்ணாதுரை ஆகியோர் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் அதிரடி விசாரணை நடத்தி, மணிகண்டபிரபு என்ற 19 வயது இளைஞரை அவரது சொந்த ஊரான கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள அங்காளகுறிச்சியில் வைத்து கைது செய்தனர்.

பின்னர் மணிகண்டபிரபு சென்னை அழைத்துவரப்பட்டார். சென்னை சி.பி.சி.ஐ.டி. காவல்துறை தலைமை அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவர் நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

நன்றி: இந்நேரம்.காம்

Leave a comment

Your email address will not be published.


*