பா ஜ க வின் கீழ்த்தர நோக்கம் புரியாதவர்களல்லர் தமிழக மக்கள்!

பா ஜ க வின் கீழ்த்தர நோக்கம் புரியாதவர்களல்லர் தமிழக மக்கள்!

தேர்தல்  நடைபெறும்  இடங்களில் கலவரங்களை நடத்துவதன்  மூலம்  தொகுதிகளை வெல்வது பா ஜ க வின் வழக்கம்.

அண்மைக்கால எடுத்துக்காட்டு முஸஃபர் நகர்..

தமிழ் நாட்டில் 2016 ஆம் ஆண்டில் சட்டமன்றத்துக்குப்  பொதுத் தேர்தல்  வருகிறது.

அதில் பா ஜ க  சில இடங்களையாவது பெற வேணடிய கட்டாயத்தில் இருக்கிறது.

தேர்தலையொட்டி அமித்ஷா மதுரை வரும் முன், தமிழ்நாட்டில் ஏதாவது கலவரத்தை நடத்தியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பா ஜ க, அண்மையில் ஆம்பூரில் நடந்த வன்முறையை முதலீடாக்க முனைந்தது.

ஆனால் அரசு விழிப்புடனிருந்து 144 தடையுத்தரவு பிறப்பித்து அதனைத் தடுத்துவிட்டது.

எனவே பாஜகவின்  வன்முறைப் பேச்சாளர்  எச். ராஜா, வாயைத் திறந்தார். முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா பற்றிப் பேசிப் பார்த்தும் எந்த எதிர்வினையும் இல்லை.

எனவே  வழக்கமான இந்துத்துவ தந்திரமான பெட்ரோல் குண்டு வீச்சு இப்போது கையில்  எடுக்கப்பட்டுள்ளது.

காரைக்குடியில் ராஜா வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாம். உடனே பொங்கி   எழுந்து விட்டர்கள் சங் பரிவாரத்தினர்.

“குஜராத் மாடல் தாண்டா இனி சரியா வரும்”
“தமிழ் நாடு பாகிஸ்தானாக மாறி வருகிறது.”
“15 சதவீதம் மெதுவாக 20தை நோக்கி சென்றுகொண்டுள்ளதன் அறிகுறி”

என்றெல்லாம் அச்செய்தியில் பின்னூட்டம் எழுதிவிட்டனர்.

குண்டு வீசியவர் யார் எவர் எனக் காவல் துறையின் புலனாய்வும் விசாரணையும் முடியும்  முன்பே, இவர்களாகவே  முடிவு செய்து  ஒரு தரப்பைக்   குறியாக்குவதன் நோக்கம் புரியாதவர்களல்லர் தமிழக மக்கள்.

தங்கள் வீட்டுக்குத் தாங்களே பெட்ரோல் குண்டு வீசிய நாடகங்களையும் தங்களைத் தாங்களே கடத்திக் கொண்டு நடத்திய நாடகங்களையும்

”ஃபேமஸ் ஆகறதுக்குதான் குண்டு வீசினேன்!” – விளம்பர ஆசையில் இந்து பிரமுகர்கள்!

விளம்பரத்திற்காக குண்டு வீசிக் கொள்ளும் பா.ஜ.க நிர்வாகிகள்!

விளம்பரத்திற்காக ஒரு வெடிகுண்டு மிரட்டல்!

அறிந்த தமிழ் மக்கள் இவர்களின் கீழ்த்தர முயற்சிக்கு ஆதரவு அளிக்க மாட்டார்கள் என்பதை இந்தக் கலவரக் கும்பல் எப்போது புரிந்து கொள்ளும்?

நச்சினார்க்கினியன்

நன்றி: இந்நேரம்.காம்

Leave a comment

Your email address will not be published.


*