மோடி ஒரு ஹிட்லர்: சிவசேனா பெண் மேயர் ஆவேசம்!

மோடி ஒரு ஹிட்லர்: சிவசேனா பெண் மேயர் ஆவேசம்!

மும்பை : “மோடியின் ஆட்சி ஹிட்லரின் ஆட்சியைப் போல் உள்ளது” என மும்பை பெண் மேயரும் சிவசேனா தலைவருமான ஸ்நேகல் அம்பேத்கர் பிரதமர் மோடியை ஆவேசமாக தாக்கியுள்ளார்.

இதுகுறித்து மும்பையின் மாலை நாளிதழ் ஒன்றுக்கு ஸ்நேகல் அம்பேத்கர் அளித்த பேட்டியில்,

“மோடியின் சுயசார்பு, செயல்படும் விதம் ஆகியவற்றுக்காக அவரை நான் பாராட்டுகிறேன். ஆனால் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல், அவரது ஆட்சி ஹிட்லரின் ஆட்சி போல் இருப்பதாகவே நான் கருதுகிறேன். அதிகாரங்கள் ஒரு நபரிடம் குவிந்திருக்கும்போது, கட்டாயம் இவ்வாறு நடக்கும்” என்று ஆவேசமாக குறிப்பிட்டார்.

மும்பையின் ஏழாவது மேயரான ஸ்நேகல் அம்பேத்கர், சிவசேனா கட்சியைச் சேர்ந்தவர். மோடி தலைமையிலான மத்திய அரசில் சிவசேனா பங்கு வகித்திருந்தாலும் மோடிக்கு எதிராக அவர் ஆட்சி பொறுப்பேற்ற நாளிலிருந்தே கடும் எதிர்ப்பினையும் விமர்சனத்தையும் அவ்வப்போது அக்கட்சி வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது மோடியை ஹிட்லர் என அக்கட்சியின் மேயர் தாக்கியுள்ளது பாரதீய ஜனதா கட்சியினரிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி: இந்நேரம்.காம்

Leave a comment

Your email address will not be published.


*