துணை ஜனாதிபதியாய் திரு ஹமீது அன்சாரி இருப்பதால்தானே?

துணை ஜனாதிபதியாய் திரு ஹமீது அன்சாரி இருப்பதால்தானே?

லக யோகா தின நிகழ்ச்சிகளில் குடியரசுத் துணைத்தலைவர் திரு ஹமீது அன்சாரி கலந்து கொள்ளவில்லை என்பதால் அவரைத் தாக்கியும் ராஜ்யசபை டிவி யோகா தின நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்யவில்லை என்று புகார் கூறி மக்களின் வரிப்பணத்தில் செயல்படும் ராஜ்யசபா டிவி யோகா தினத்தை இருட்டடிப்பு செய்த்தாக குற்றம் சுமத்தி அதனைக் கண்டித்த கருத்துக்களையும் பாஜக பொதுச்செயலாளரும் முக்கிய ஆர்.எஸ்.எஸ் தலீவருமான ராம் மாதவ் ட்விட்டரில் பதிவு செய்திருந்தார்.

துணை ஜனாதிபதி உடல்நிலை சரியில்லாத காரணத்தால் யோகா நிகழ்வில் பங்கேற்கவில்லை என்று தெரிந்ததால் தனது பதிவை நீக்குவதாகவும் துணை ஜனாதிபதி என்ற அரசியல் சாசனப் பதவி மதிக்கப்பட வேண்டும் தனக்குத் தானே உபதேசம் கூறி இன்னொரு பதிவும் எழுதினார். பிறகு அந்த பதிவும் நீக்கப்பட்டு விட்டது.

துணை ஜனாதிபதி திரு ஹமீது அன்சாரி அவர்களுக்கு உடல் நலக் குறைவு எதுவும் கிடையாது என்றும் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு தரப்படாததால்தான் அவர் பங்கேற்கவில்லை என்று அவரது அலுவலகம் தெளிவு படுத்தி விட்டது. பிரதமர் தலைமை விருந்தினராக பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு ஜனாதிபதிக்கோ அல்லது துணை ஜனாதிபதிக்கோ அழைப்பு அளிக்கும் மரபு கிடையாது என்று பாஜக அமைச்சரே விளக்கம் கொடுத்து விட்டார்.

அதே போல ராஜ்ய சபை டி.வியில் யோகா தின நிகழ்வுகள் முழுமையாக ஓளிபரப்பானது என்பதுதான் உண்மை.

ஆக காவிப்படை ராம் மாதவ் அவசியமற்ற பொய்ப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டார் என்பது ஆணித்தரமாக நிரூபணமாகிறது. இதில் அதிர்ச்சியடைய ஒன்றுமில்லை. சங் பரிவாரக் கூட்டத்தின் பிழைப்பே இதுதான். சிறுபான்மை மக்களுக்கு எதிராக நச்சைக் கக்குவதற்கே உலா வருகிற விஷ ஜந்துக்களால் வேறு எப்படி செயல்பட முடியும்?

பொய் சொல்லி ராம் மாதவிற்கு சில கேள்விகள்.

மக்கள் வரிப்பணத்தில் செயல்படும் ராஜ்யசபா டி.வி யோகா தினத்தை காண்பிக்கவில்லை என்று பொய் சொல்லி கோபப்படும் ராம் மாதவ் அவர்களே, யோகா தினம் என்ற பெயரில் மத்திய அரசு கோடிக்கணக்கான ரூபாய்களை விளம்பரத்திற்காக செலவழித்ததே, அது யார் பணத்தில்? அது என்ன உங்களது தந்தையின் சேமிப்பா இல்லை மக்களின் வரிப் பணமா?

துணை ஜனாதிபதி கண்டிப்பாக கலந்து கொள்ள யோகா தினம் என்ன சுதந்திர தினமா இல்லை குடியரசு தினமா?

துணை ஜனாதிபதி பதவியை மதிக்க வேண்டும் என்று முதல் பதிவின் போது உங்களுக்கு தெரியாதா?

துணை ஜனாதிபதியாக திரு ஹமீது அன்சாரி இருப்பது உங்கள் கண்களை உறுத்துவதால்தானே அவரை தொடர்ந்து தாக்கிறீர்கள்?

நீங்களோ இல்லை உங்கள் கூட்டமோ எப்போதாவது மத வெறி அற்ற மனிதர்களாக மாறுவீர்களா?  அது இந்த நூற்றாண்டில் சாத்தியமா?

S. Raman, Vellore

நன்றி: இந்நேரம்.காம்

Leave a comment

Your email address will not be published.


*