அத்வானிக்கு எதிர்கட்சிகள் ஆதரவு!

அத்வானிக்கு எதிர்கட்சிகள் ஆதரவு!

புது டெல்லி : இந்தியாவில் மீண்டுமொரு அவசரநிலை வர வாய்ப்புள்ளது எனக்கூறிய பாரதீய ஜனதா கட்சி மூத்த தலைவர் அத்வானியின் கருத்தை கெஜ்ரிவால், நிதிஷ்குமார் உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

“ஜனநாயத்தை வலுப்படுத்தும் அரசியல் செயல்பாட்டையோ மிகச் சிறந்த ஜனநாயக தலைவர்களையோ தற்போது பார்க்க முடியவில்லை. இந்தியாவில் மீண்டுமொரு அவசர நிலைகூட பிரகடனப்படுத்தப்படலாம்” என பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அத்வானி பிரதமர் மோடிக்கு எதிராக கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இது குறித்து பாரதீய ஜனதா கட்சியிடம் கருத்து கேட்டபோது, “பாரதீய ஜனதாவில் பேச்சுரிமை உண்டு. அது ஒரு ஜனநாயக கட்சி” என அதன் செய்தி தொடர்பாளர் அக்பர் கூறியுள்ளார். எனினும் அத்வானியின் மோடிக்கு எதிரான பேச்சு குறித்த எந்தக் கருத்தும் கூறவில்லை.

அதே சமயம், அத்வானியின் கருத்தை நிதிஷ்குமார், கெஜ்ரிவால் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் வரவேற்றுள்ளனர். “அத்வானி கூறியது உண்மையே” என்று அவர்கள் கருத்து கூறியுள்ளனர்.

இந்துத்துவ மனப்பான்மை கொண்ட அத்வானி, ஜனநாயகத்துக்காக பேசியிருப்பது சங்பரிவார அமைப்புகளிடையே பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.

Leave a comment

Your email address will not be published.


*