மதுவிலக்குக்கு 1 லட்சம், தெர்மகோல் தட்டுக்குத் தடை: அசத்தும் ஜார்கண்ட்!

மதுவிலக்குக்கு 1 லட்சம், தெர்மகோல் தட்டுக்குத் தடை: அசத்தும் ஜார்கண்ட்!

ஜார்கண்ட் : தெர்மகோல் பயன்படுத்தி உருவாக்கப்படும் தட்டுகளுக்குத் தடை விதித்து ஜார்கண்ட் மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இரண்டு நாள் பயணமாக மேற்கு சிங்பம் மாவட்டத்திற்கு சென்ற ஜார்கண்ட் மாநில முதல்வர் ரகுவர் தாஸ், நக்சல் பாதிப்புள்ள பகுதிகளைப் பார்வையிட்டார். அப்போது, அங்குள்ள மக்களுக்கு பல்வேறு நல திட்டங்களை நிறைவேற்ற உத்தரவிட்டார்.

இலைகளால் தயாரிக்கப்படும் தட்டுகளைப் பயன்படுத்த ஊக்குவிக்கவும், அதனைத் தொழிலாக கொண்டுள்ள ஏழை மற்றும் பழங்குடி மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கவும், தெர்மகோல் தட்டுகளுக்குத் தடை விதிப்பதாக உத்தரவிட்டார்.

மேலும், பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் கிராமங்களுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஜார்கண்ட் முதல்வரின் இந்த அறிவிப்புகள் மக்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

நன்றி: இந்நேரம்.காம்

Leave a comment

Your email address will not be published.


*