ரமளான் நோன்புக் கஞ்சிக்கு இலவச அரிசி – ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவு!

ரமளான் நோன்புக் கஞ்சிக்கு இலவச அரிசி – ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவு!

சென்னை: ரமளான் நோன்பை முன்னிட்டு தமிழக முழுவதும் உள்ள பள்ளிவாசல்களுக்கு நோன்பு கஞ்சிக்கான அரிசி வழங்க தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:

“ரமளான் நோன்பு கஞ்சி தயாரிப்பதற்காக மொத்த அனுமதி கோரி பெறப்படும் அனைத்து விண்ணப்பங்களின் மீதும் பரிசீலனை செய்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட வேண்டும்.

ரமளான் மாத நோன்பாளர்களுக்காக கஞ்சி தயாரிக்க இலவசமாக பச்சரிசி வழங்குவதற்காக கடந்த ஆண்டுகளில் கடைபிடிக்கப்பட்ட அதே முறையை இந்த ஆண்டும் கடைபிடிக்கலாம்

எனவே, கஞ்சி தயாரிக்க மொத்த அனுமதி வழங்குமாறு கேட்டு பெறப்படும் மனுக்களை அவரவரே தணிக்கை செய்து, தகுதியுள்ள மனுக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த ஆண்டில் அனுமதி அளிக்கப்பட்ட பள்ளிவாசல்களின் எண்ணிக்கை மற்றும் ஒதுக்கீடு செய்யப்பட்ட அரிசியின் அளவு ஆகியவை குறித்து உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையரக அலுவலகத்துக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி: இந்நேரம்.காம்

Leave a comment

Your email address will not be published.


*