மழைக்குப் பின்னும் நீடித்தது விளாசல்: ஷிகர் தவன் சதம்

மழைக்குப் பின்னும் நீடித்தது விளாசல்: ஷிகர் தவன் சதம்

வங்கதேசத்துக்கு எதிராக ஃபதுல்லாவில் நடைபெற்றுவரும் டெஸ்ட் போட்டியில், இந்திய துவக்க வீரர் ஷிகர் தவன் சதம் அடித்துள்ளார்.

காலை துவங்கிய இந்த போட்டி, இந்தியா 107 ரன்கள் எடுத்திருந்த போது மழையால் தடைபட்டது. மதியம் மூன்று மணிக்கு மேல் தொடர்ந்து போட்டியில் இந்திய துவக்க வீரர்கள் முரளி விஜய், ஷிகர் தவன் இருவரும் தங்கள் அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.

முரளி விஜய் 98 பந்துகளில் அரை சதம் கடந்தார். மறுமுனையில் ஆடிவந்த ஷிகர் தவன் 101 பந்துகளில் சதம் கடந்தார். இதில் 16 பவுண்டரிகள் அடங்கும்.

தொடர்ந்து அதிரடியாக ஆடி வந்த ஷிகர் தவன், 98 ரன்கள் எடுத்திருந்தபோது ஏனோ தனது அதிரடியை சட்டென குறைத்தார். அடுத்த சந்தித்த 7 பந்துகள் வரை ரன் ஏதும் எடுக்காத அவர் 8-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி சதத்தைக் கடந்தார். 36-வது ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி இந்தியா 167 ரன்களைக் குவித்துள்ளது.

Leave a comment

Your email address will not be published.


*