ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் ‘ஷாகா’ போல இந்தியாவை நடத்த முயலுகிறது பா.ஜ.க.: ராகுல் ‘பொளேர்’

ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் ‘ஷாகா’ போல இந்தியாவை நடத்த முயலுகிறது பா.ஜ.க.: ராகுல் ‘பொளேர்’

டெல்லி: இந்துத்துவா அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பயிற்சி முகாம்களான ‘ஷாகா’க்களைப் போல ஒட்டுமொத்த இந்தியாவையே நடத்த பாரதிய ஜனதா கட்சி முயற்சிகிறது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவினரிடையே ராகுல் காந்தி பேசியதாவது: BJP wants to run India like an RSS Shakha, says Rahul இந்தியாவை பாரதிய ஜனதா கட்சி, அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.-ன் பயிற்சி முகாம்கள் போல (ஷாகா) நடத்த நினைக்கிறது. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைப் பொறுத்தவரையில் விவாதங்களையோ கலந்தாலோசனைகளையோ அது அனுமதிப்பதில்லை.

ஒழுக்கம் என்ற பெயரில் தனித்தன்மைகளை ஆர்.எஸ்.எஸ். இயக்கம் கொலை செய்கிறது. ஆர்.எஸ்.எஸ்.-ன் இத்தகைய கொள்கைகள் இந்தியாவை நாசம் செய்துவருகின்றன. ஒருவர் பேச மற்ற அனைவரும் கேட்க வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ்.-ன் வழி முறை. ஆனால் நாங்கள் சொல்கிறோம் அனைவரும் வாருங்கள் அமர்ந்து பேசுவோம், அதில் இருந்து எல்லா பிரச்சனைக்கும் சிறந்த தீர்வை பெறமுடியும்.

காங்கிரசில் விவாதத்திற்கும், உரையாடலுக்கும் இடம் உள்ளது. ஆனால் பாரதிய ஜனதாவில் அப்படியான ஒன்று இல்லை. ஜெர்மனியில் செய்யப்பட்ட போது ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்களில் கையை உயர்த்தி சல்யூட் வைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். நமது நாட்டின் பிரதமர் மங்கோலியாவுக்குக் கூட போய்வந்துவிட்டார்.. ஆனால் இந்த நாட்டின் ஏழை விவசாயி வீட்டுக்கு அவரால் செல்ல முடியவில்லை. இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

Leave a comment

Your email address will not be published.


*