மலேசிய வனப்பகுதியில் ரொஹிங்யா முஸ்லிம்களின் 139 ஜனாசாக்கள் மீட்பு

மலேசிய வனப்பகுதியில் ரொஹிங்யா முஸ்லிம்களின்  139 ஜனாசாக்கள்  மீட்பு

மலேசியாவில் இதுவரை ரொஹிங்யா முஸ்லிம்களின் 139 ஜனாசாக்கள் மீட்கப்பட்டுள்ளன என்று அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

மியான்மரில் ரொஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் தீவிரமடைந்திருப்பதால் அந்த நாட்டு முஸ்லிம்கள் மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு படகுகளில் தப்பிச் செல்கின்றனர்.

அந்த வகையில் மலேசியாவின் புகிட் வாங் பர்மா, பெரில்ஸ் வனப்பகுதியில் சுமார் 28 முகாம் கள் செயல்பட்டுள்ளன. முகாம்களில் தங்க வைக்கப் பட்டிருந்த நூற்றுக்கணக்கான அகதிகள் பசி, நோயால் உயிரிழந் துள்ளனர். அவர்கள் வனப்பகுதி களில் ஆங்காங்கே புதைக்கப் பட்டுள்ளனர்.

சம்பவ பகுதியை மலேசிய அதிரடிப் படை போலீஸார் அண்மையில் கண்டுபிடித்தனர். அப்பகுதிகளில் இருந்து இது வரை 139 அகதிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்தத் தகவலை மலேசிய உள்துறை இணை அமைச்சர் வான் ஜூனைதி துங்கு ஜாபர் நிருபர்களிடம் தெரிவித்தார்

Leave a comment

Your email address will not be published.


*