மோடியின் வசந்த காலம் முடிந்தது: அமெரிக்க நாளிதழ்கள் கருத்து

மோடியின் வசந்த காலம் முடிந்தது: அமெரிக்க நாளிதழ்கள் கருத்து

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வசந்த காலம் முடிந்துவிட்டது, அவருக்கு முன்பாக ஏராளமான சவால்கள் காத்திருக்கின்றன என்று அமெரிக்க நாளிதழ்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவில் அதிகம் விற்பனையாகும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல், மோடியின் ஓராண்டு நிறைவு குறித்து சிறப்பு கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

ரயில்வே, பாதுகாப்புத் துறையில் அந்நிய முதலீட்டை மோடி அனுமதித்துள்ளார். சிவப்பு நாடா முறையை ஓரளவுக்கு ஒழித்துள்ளார். இவை வரவேற்கத்தக்கன.

அதேநேரம் பல்வேறு முக்கிய விவ காரங்களில் மோடி அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ‘இந்தியாவில் தயாரிப் போம்’ திட்டம் வெற்று விளம்பர பிரச்சார மாக மட்டுமே உள்ளது. இத்திட்டத்தின் மூலம் உற்பத்தித் துறையில் 12 முதல் 14 சதவீதம் வரை வளர்ச்சியை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 5.3 சதவீதத்தில் இருந்து 6.8 சதவீதமாக மட்டுமே வளர்ச்சி விகிதம் உயர்ந்துள்ளது. மின் பற்றாக்குறை, துறைமுகத்தில் போதிய வசதியின்மை போன்றவை வளர்ச்சிக்கு தடையாக உள்ளன.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (2013-14), மோடியின் (2014-15) ஆட்சியை ஒப்பிட்டுப் பார்க்கும்போது மன்மோகன் ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி 6.9 ஆக இருந்தது. மோடியின் ஆட்சியில் 7.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆனால் கணக்கீட்டு முறையில் செய்யப்பட்டுள்ள சில மாற்றங்களே பொருளாதார வளர்ச்சி விகிதம் உயர்ந்திருப்பதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

இப்போதைய நிலையில் மோடி ஆட்சியின் வசந்த காலம் நிறைவடைந்து விட்டது. அவருக்கு முன்பாக ஏராளமான சவால்கள் காத்திருக்கின்றன. இவ்வாறு வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூயார்க் டைம்ஸ் கருத்து

அமெரிக்காவின் மற்றொரு முன்னணி நாளிதழான நியூயார்க் டைம்ஸ் வெளியிட் டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

மோடியின் ஆட்சியில் மக்களின் எதிர் பார்ப்புகள் அதிகம். ஆனால் அந்த எதிர் பார்ப்புகள் முழுமையாக பூர்த்தியாக வில்லை. பொருளாதார வளர்ச்சியும் எதிர் பார்த்த அளவு இல்லை. மோடியின் முக்கிய சீர்திருத்த திட்டங்களை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன.

ஓராண்டு ஆட்சி நிறைவில் வேலை வாய்ப்புகள் பெருகவில்லை. அரசு திட்டங்களில் முக்கிய முடிவு எடுப்பதில்கூட காலதாமதம் ஏற்படுகிறது. இது தொழில்வளர்ச்சிக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.

எனினும் மோடியின் மீது இந்திய மக்கள் முழுமையாக நம்பிக்கை இழந்து விடவில்லை. ஒரு மரம் நட்டால் அது வளர்ந்து கனி கொடுக்க காலஅவகாசம் தேவை. அதுபோல மோடியின் ஆட்சி பலன் தர காத்திருக்க வேண்டியது அவசியம் என்று பலர் கருத்து தெரி வித்துள்ளனர். இவ்வாறு நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தியில் குறிப்பிடப் பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published.


*