பா.ஜ.க ஆட்சி ஓராண்டு நிறைவு விழா: அத்வானி புறக்கணிப்பு!

பா.ஜ.க ஆட்சி ஓராண்டு நிறைவு விழா: அத்வானி புறக்கணிப்பு!

உத்தரப்பிரதேசம்:பாஜக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைவதைக் கொண்டாடும் வகையில் நடத்த இருக்கின்ற விழாவுக்கு அழைப்பு விடுக்கப்படாமல் பாஜக மூத்த தலைவர் அத்வானி புறக்கணிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு வரும் 26-ஆம் தேதியுடன் ஓராண்டை நிறைவு செய்கிறது. இதனையடுத்து நாளை(25-ஆம் தேதி) மோடி பங்கேற்கும் பிரமாண்டமான விழா ஒன்றை உ.பி மாநிலத்தில் உள்ள மதுராவில் வைத்து நடத்த பா.ஜ.க திட்டமிட்டுள்ளது.

இந்த விழாவிற்கு அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அத்வானிக்கு அழைப்பு விடுக்காமல் புறக்கணிக்கப்பட்டுள்ளார். ஆனால் அக்கட்சியின் முன்னாள் பிரதமரான வாஜ்பாயிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது அக்கட்சியினுள்ளே அத்வானியின் ஆதரவாளர்களிடையே மோடியின் மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதோடு அவருக்கு எதிரான எதிர்ப்புக் குரல்களும் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

நன்றி:இந்நேரம்.காம்

Leave a comment

Your email address will not be published.


*